கன்னியாகுமரியில் மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள்; ஆர்வம் உள்ள மாணவர்கள் பதிவு செய்யலாம்..!
குமரி மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ள மாணவர்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
Continues below advertisement

கேரம் போட்டி
குமரி மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ள மாணவர்கள் https:// www.tnsports.org.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கன்னியாகுமரி மாவட்ட பிரிவின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் வரும் 12-ந் தேதி நாகர்கோவில் அண்ணா விளையாட்டங்கத்தில் நடைபெறவுள்ளது. போட்டிகளில் 1-வது வகுப்பு முதல் ஐந்தாவது வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் இளநிலை பிரிவிலும், 6-வது வகுப்பிலிருந்து 12-வது வகுப்பு வரை படிப்பவர்கள் முதுநிலைப் பிரிவிலும் கலந்து கொள்ளலாம்.
போட்டிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் ஆண், பெண் இரு பாலருக்கும் நடைபெறும். இளநிலைப் பரிவில் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.500, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.250, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.125 மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.1000 வீதமும், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.500 வீதமும், மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.250 வீதமும், ரொக் கப்பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் முதுநிலைப் பரிவில் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.1000, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.500, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ. 250 மற்றும் இரட் டையர் பிரிவில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.2000 வீதமும், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.1000 வீதமும், மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.500 வீதமும், ரொக்கப் பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கப்படும்.
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் https:// www.tnsports.org.in என்ற இணையதளத்தில் District Level Carrom Competition என்பதனை சொடுக்கி (கிளிக்செய்து) தங்களுடைய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். மேலும் புகைப்படம். கையொப்பம் மற்றும் படிக்கும் பள்ளியிலிருந்து உண்மைச் சான்றிதழினை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இணையதளத்தில் பதிவு செய்யும் மாணவ, மாணவிகள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். மேலும் விபரங்களுக்கு 04652 262060 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்படுபவர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Continues below advertisement
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Just In
“நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
ஆதார் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இறந்தவர்களின் பெயரை நீக்குவது எப்படி? புதிய வசதி அறிமுகம்!
"அரசு கொடுத்த வேலை, வீட்டுமனைப் பட்டாவில் எனக்கு திருப்தி இல்லை" - அஜித்குமாரின் தம்பி பரபரப்பு பேட்டி
Cuddalore Accident: இப்ப தான் முழிச்சிங்களா விஜய்..8 மணி நேரம் கழித்து இரங்கல்! கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.