உத்திரபிரதேசத்தில் நடந்த ஒய்.எஸ்.பி.ஏ நடத்திய சிலம்பாட்ட மாநில அளவிலான போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சர்வதேச போட்டிக்கு தேர்வாகி கன்னியாகுமரி மாவட்டம் சொந்த ஊரான குலசேகரத்திற்கு வந்த மாணவருக்கு அவர் பயின்று வரும் பள்ளியில் ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

 



 

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே  ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளி ராஜகுமார். இவரது மகன் ராம்கார்த்திக். 12ஆம் வகுப்பு  படிக்கும் இவர் அழிந்து வரும் சிலம்ப கலையை காப்பாற்ற சிறு வயது முதலே இவரது தந்தை சிலம்ப பயிற்சி கொடுத்து இவர் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று வெற்றியும் பெற்று ஏராளமான கோப்பைகளையும் பதக்கங்களையும் வாங்கி குவித்து வருகிறார். அண்மையில் உத்தர பிரதேசத்தில் நடந்த ஒய்.எஸ்.பி.ஏ நடத்திய மாநில அளவிலான போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று உள்ளார். அத்தோடு சர்வதேச போட்டிக்கு தேர்வாகி உள்ளார். பதக்கத்துடன் சொந்த ஊரான குமரி மாவட்டம் குலசேகரத்திற்கு இன்று வந்த மாணவருக்கு அவர் பயின்று வரும் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து கூறிய மாணவர் தற்போது தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் குறித்து அரசு போதிய விழிப்புணர்வுக் ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பலரும் இந்த கலையை ஆர்வமுடன் கற்று வருகிறார்கள். இந்நிலையில் உலக அளவில் சிலம்பதிற்கு அங்கீகாரம் பெறும் வகையில் சிலம்பம் விளையாட்டை ஒலிம்பிக்கில் இணைக்க வேண்டும் என தங்க பதக்கம் பெற்ற ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளி மகன் மத்திய மாநில் அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.