ஜெயக்குமார் மரணத்தில் வெளிப்படையான விசாரணை வேண்டும் - செல்வ பெருந்தகை

”இன்று மாலைக்குள் ஒரு நல்ல தகவல் வெளியே வரும் என்று மாவட்ட எஸ்பி என்னிடம் தெரிவித்துள்ளார்”

Continues below advertisement

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கே பி கே ஜெயக்குமார். இவர் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தார். இவரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காணவில்லை, கண்டுபிடித்து தர வேண்டுமென அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று அவரது வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்திலேயே  ஜெயக்குமார் உடல் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை உவரி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் அவரது மகன் கருத்தையா ஜாஃப்ரினிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் மற்றும் எம்.பி. விஜய்வசந்த் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Continues below advertisement

இதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறியதாவது, ஒரு நல்ல மனிதர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தற்போது உயிரிழந்து உள்ளார் என்பது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது வெளிப்படையாக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் அவர்கள் எந்த கட்சியின் பின்புலத்தில் இருந்தாலும், எந்த அரசியல் போர்வையில் இருந்தாலும், தொழிலதிபராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இன்று மாலைக்குள் ஒரு நல்ல தகவல் வெளியே வரும் என்று மாவட்ட எஸ்பி என்னிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவரது மரண வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் யாருடைய பெயர்கள் இருந்தாலும் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எங்கள் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட காவல்துறை வெளிப்படையான  விசாரணையை மேற்கொள்ள வேண்டும் அப்படி வெளிப்படையாக விசாரணை மேற்கொண்டால்தான், யார் காரணம் என்பது வெளியே வரும். மேலும் நாங்கள் கட்சி ரீதியாகவும் இதை விசாரித்து நாங்கள் மேலிடத்திற்கு இந்த அறிக்கையை அனுப்புவோம். காவல்துறை விசாரணை என்பது தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக மற்ற தகவல்கள் எங்களால் வெளியே தெரிவிக்க முடியாது. இதில் பணம் படைத்தவராக இருக்கலாம். மிகப்பெரிய அரசியல்வாதியாக கூட இருக்கலாம் அப்படி இருந்தாலும் கூட அவர்கள் மீதும் காவல்துறை பாரபட்சம் காட்டாமல்  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் உள்ளதாக எனது கட்சிக்காரர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள். அதேபோன்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. ஆகவே இதில் பெருத்த சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மீது விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்விக்கு அவர் மீதும் விசாரணை நடத்தலாம் நாங்க தான் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். இந்த விசாரணை என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதுதான் மேலும் உயிரிழந்த ஜெயக்குமாரின் கை கால்கள் இரண்டும் கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து ஏதோ ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளதாக எங்களுக்கு தெரிகிறது. ஆகவே தான் நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறோம் வெளிப்படையான விசாரணை மேற்கொண்டால்தான் இவருடைய உயிரிழப்புக்கு காரணம் என்பது வெளியே வரும் என தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola