அயோத்தியில் ஸ்ரீராமபிரானுக்கு மிகப்பெரிய அளவில் கோயில் கட்டி வரும் 22 ஆம் தேதி குடமுழக்கு விழா நடைபெற உள்ளது. இதற்காக இந்து அமைப்பினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தலைவர்கள் அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர். இதற்காக இந்தியா முழுவதும் உள்ள நதிகளில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பான முறையில் குடமுழக்கு விழா நடத்துவதற்கு தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சுரேஷ் என்பவர் தனது ஆதரவாளர்கள் உடன் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்களை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அப்போது அந்த மனுவில் நெல்லை மாவட்டம் ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த மாவட்டச் செயலாளர் கலைக்கண்ணன் என்பவர் அவரது முகநூல் பக்கத்தில் ராமபிரானை இழிவுபடுத்தும் விதமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் ராமபிரான் பேசுவது போன்று அவரது பெயரை ”சொரி ராம் என எழுதி நா யார் தெரியுமா? வடக்க என் ரேஞ்ச் என்னனு தெரியுமா? என்பது போன்று கேள்விகளை பயன்படுத்தி பின் தமிழ்நாடு பதில் சொல்வது போன்று வார்த்தைகளை பயன்படுத்தி எழுதியுள்ளார்.
அதில் யாருல நீ கொலைகார பய தானே? இப்பதான் உன் கேஸ் டீடைல் பார்த்தேன், பொண்டாட்டியை சந்தேகப்பட்டு கேவலப்படுத்தி தீக்குளிக்க செஞ்சவன் தானே தவம் பண்ணிக்கிட்டு இருந்த சம்பூகனை சாதி பெயரை சொல்லி அவன் தலையை வெட்டி ஆணவகொலை பண்ணின பொறுக்கி தானே, உன் சில்லறை சேட்டை எல்லாம் வடக்க வச்சிக்க தமிழ்நாட்ல வச்சிகாத வெளியே போ ராஸ்கல்..” என்பது போன்ற வசனத்தை பதிவிட்டுள்ளார்.
அதன் கீழே சூர்யா பேசுவது போலும் ராமபிரான் நின்று குற்றவாளிபோல் கேட்பது போலவும், சூர்யா நடித்த சிங்கம் படத்தை வெளியிட்டு மக்களிடையே கலவரத்தை தூண்டும் விதமாக பதிவிட்டுள்ளார். எனவே அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்து இருந்தார. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது