தமிழகம் முழுவதும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு கொடுத்து உள்ளது அதன் அடிப்படையில் கன்னியாகுமரி  மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது, ஏற்கனவே மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது குறிப்பாக  ,தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் பாதிப்பு எற்பட்டது ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியது இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் இதில் இருந்து தற்போது மீண்டு வரும் குமரி மக்கள் தற்போது பெய்து வரும் மழை காரணமாக கலக்கத்தில் உள்ளனர்.




நாகர்கோவில்,  ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரம் பேச்சிப்பாறை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் விடியவிடிய கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மீண்டும் திற்பரப்பு அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால்  அருவிக்கரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளும் பொது மக்களும் குளிக்க தடை விதித்து உள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் தற்போது பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது மாவட்ட நிர்வாகம் சார்பில் மழை பெய்யும் அளவை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.





மாவட்டத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில் மழை சேதங்களை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது அந்த வகையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த இன்றைய  மழை அளவு விபரம் (மில்லி மீட்டர்)

நாகர்கோவில் - 22
கன்னிமார் - 94.2
பாலமோர் - 60.4
முள்ளங்கினாவிளை - 59.4
பெருஞ்சாணி - 58.2
திற்பரப்பு - 58.2
சுருளோடு - 57
கோழிப்போர்விளை - 57
புத்தன் அணை - 56.8
பூதப்பாண்டி - 55.2
பேச்சிப்பாறை - 50.2
மாம்பழத்துறையாறு - 46.4
சிற்றாறு 1 - 37.4
குருந்தன்கோடு - 35.6
சிவலோகம் - 34.2
கொட்டாரம் - 30.2
மைலாடி - 28.4
அடையாமடை - 27.