சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய சிறப்பு அதிகாரிகள் நியமனம்!
தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் அடிப்படை தேவைகளை கண்காணிப்பதற்காக கேரள அரசு ஒத்துழைப்புடன் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் சபரிமலை சன்னிதானத்தில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருவதாக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆய்வு மேற்கொள்ள இன்று தமிழக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு இன்று வருகை தந்தார் முதலாவதாக சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் உள்ள புராதன மூலிகை ஓவியங்களை பார்வையிட்டு பின்னர் சாமி தரிசனத்தில் ஈடுபட்டார் தொடர்ந்து கோவிலில் ஆய்வு செய்த அமைச்சர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சுசீந்திரம் கோவிலில் உள்ள பழமை வாய்ந்த மூலிகை ஓவியங்களை பார்வையிட்டார்.
பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கடந்த ஜூன் இரண்டாம் தேதி தீ விபத்து ஏற்பட்டு கருவறை மேற்கூரை சேதமடைந்தது தமிழக அரசு 1.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இத்தனை சீரமைக்கும் திருப்பணிகளை அமைச்சர் நேரில் சென்று துவங்கி வைத்தார். இதற்கிடையே வளர்ந்து வரும் கோவில் என்பதால் கோவிலை விரிவுபடுத்த வேண்டும். கோவில் திருக்கொடிகம்பத்தை மாற்ற வேண்டும். ஆகம விதிகளின்படி பணிகளை துவக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து அமைப்பினர் மண்டைக்காடு கோவில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர் பாபு கூறுகையில் சபரிமலை சன்னிதானத்தில் தமிழக பக்தர்களின் மருத்துவம் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடர்பாக தமிழக அரசின் சார்பில் இரண்டு அதிகாரிகள் 24 மணி நேரமும் சபரிமலை சன்னிதானத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக இருதய சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக ஆம்புலன்ஸ் வசதி வரும் 14-ஆம் தேதி சென்னையில் துவங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். அமைச்சர் சேகர்பாபு போராட்டக் குழுவினரை அழைத்து நாகர்கோவிலில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்து அமைப்பினர் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர், கோவில் திருப்பணிகள் தேவபிரசன்னத்தின் அடிப்படையில், ஆகம விதிகளின்படிதான் நடக்கிறது. கோவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலும் உள்ளதால் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக அறநிலையத்துறை தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர், போராட்டத்தால் இந்து பக்தர்களை கோவிலில் நடந்த திருப்பணி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விடாமல் வர விடாமல் தடுத்து விட்டீர்கள் என்றார்.