ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டார பகுதிகளான கோட்டைமேடு, கோரைப்பள்ளம், கிளாமரம், காவடிபட்டி, ராமசாமிபட்டி, கமுதி விளக்கு உள்ளிட்ட கிராமங்களில் நெல்லி விவசாயம் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை மழையை எதிர்பார்த்து சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நெல்லிக்காய் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கொரோனா பாதிப்புகளுக்கு இடையே எதிர்பார்த்ததைவிட விளைச்சல் அதிகமான நெல்லிக்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இதனால் நெல்லிக்காய் விவசாயிகள் போக்குவரத்து செலவுகூட கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தஞ்சையில் திருமணமான 5 மாதங்களில் புதுமண தம்பதி தற்கொலை



பெரிய நெல்லிக்காய் பெருமளவு வைட்டமின் `சி' நிறைந்தது என்பது நமக்கெல்லாம் தெரியும் என்றாலும், கொரோனா காலகட்டத்தில்தான் பெரிய நெல்லிக்காயின் மகத்துவமும் அது தருகிற நோய் எதிர்ப்பு சக்தியும் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கோட்டைமேடு, கோரைப்பள்ளம், கிளாமரம், ராமசாமிபட்டி, காவடிபட்டி, க.விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் கோடைமழையை நம்பி, நெல்லிக்காய் விவசாயத்தில் விவசாயிகள் பயிர் செய்தனர். அவ்வப்போது பெய்த கோடை மழையால் நெல்லி விவசாயத்தில் மகசூல் அதிகரித்து, ஒரு மரத்திற்கு 20 கிலோ நெல்லிக்காய்கள் அறுவடை செய்யப்பட்டது. 




மருத்துவகுணம் வாய்ந்த நெல்லிக்காய்களுக்கு மவுசு அதிகரித்துள்ள நிலையில், அதிக விளைச்சல் காரணமாக நெல்லி கிலோ 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யபட்டு, மார்க்கெட்டில் அரைக்கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிக விளைச்சலால், நெல்லிக்காய் விவசாயிகளுக்கு குறைந்தளவு வருவாய் கிடைக்கிறது. தற்போது கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் நெல்லி விவசாயிகள் பலர் விற்பனைக்காக எடுத்து செல்லபடும் போது போக்குவரத்துக்காக அதிக செலவு செய்யும் கட்டாயத்தால், நெல்லிக்காய்களை அறுவடை செய்யாமல், செடிகளிலேயே விவசாயிகள் விட்டு சென்றுள்ளனர். 




மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கடலூரில் விழாக்கோலம் பூண்ட முழு ஊரடங்கு - கும்பாபிஷேகத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்


எனவே, விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்யவும், மூடபட்ட உழவர் சந்தைகளில் விவசாயிகளின் பொருட்களை விற்பனை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்,மேலும்  தற்போது நெல்லிக்காய் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் குளிர்பதன கிடங்கி அமைக்கவும், ஒப்பந்த அடிப்படையில் காய்களை வாங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவையில் அரசு அலுவலத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை மாட்டிய பாஜக நிர்வாகி கைது