நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி வருகை புரிந்தார். அப்போது நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் விடுதியில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறுகையில், "ஜூலை 15 ஆம் தேதி தமிழகமெங்கும் அனைத்து டாஸ்மாக் கடை முன்பாக அந்தந்த பகுதி பெண்களின் தலைமையில் மதுபான பாட்டில்கள் உடைப்பு போராட்டம் நடைபெறவிருக்கிறது. அதன் பிறகு பூரண  மதுவிலக்கை அமல்படுத்த வில்லையெனில், குறிப்பாக சட்டவிரோத பார்கள் உள்ளிட்டவற்றை தடை செய்யவில்லையெனில் ஒட்டுமொத்த மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திமுக பல வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தது. அதில் குறிப்பாக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ஒழிக்க முதல் கையெழுத்திடுவோம் என சொன்னார்கள். இரண்டரை வருடமாகியும் அதற்கான கையெழுத்து இன்னும் இடப்படவில்லை. பூரண மதுவிலக்கு என்று சொல்லப்பட்டது, அதற்கான நடவடிக்கையும் இல்லை, மிக முக்கியமாக குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தோகை மாதம் ஆயிரம் வழங்கப்படும் என தேர்தலின் கடைசி கட்ட பிரச்சாரத்தின் போது அனைவருமே அதனை முன்னெடுத்து சென்றனர்.  நீட், மதுவிலக்கு, மகளிர் உதவித்தொகை இந்த மூன்றிற்கும் பதவியேற்றவுடன் கையெழுத்திடுவார்கள் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக பல கட்டுப்பாடுகளை விதித்து உதவித்தொகை திட்டம் அமலுக்கு வரும் என சொல்கின்றனர். 


ஆண்டுக்கு 3600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் குடும்ப தலைவிக்கு உரிமை தொகை கிடையாது என்பது நூற்றுக்கு 99 பேருக்கு இந்தத் தொகை சென்றடையாது என்பதை தான் காட்டுகிறது,  இந்த வாக்குறுதியை காப்பாற்றாமல் முற்றிலும் அதற்கு நேர் மாறாக செயல்பட்டு வருகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம். இதில் இவர்கள் நாங்கள் சொன்னதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம் என்கின்றனர். ஆனால் சொன்னதை செய்வோம் என்று தான் இருக்கிறது. இது தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பெண்களை ஏமாற்றுவதற்கு சமமாக உள்ளது. பெண்களின் மிகப்பெரிய கோபத்திற்கு ஆளாக நேரிடும். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் 2024 தேர்தலில் திமுக எந்த கிராமத்திற்கும், நகரத்திற்கும் சென்று பெண்களிடத்தில் வாக்கு கேட்கும் உரிமையை இழந்து விடுகிறது, இந்த திட்டமே கட்சிக்காரர்களுக்கு மட்டும் தான் கொடுப்போம். வேறு யாருக்கும் கிடைக்காது என்று தான் அர்த்தம் என்று விமர்சித்தார். 


மேகதாது அணை விவகாரத்தில் திமுக அரசு வெறும் வாய் சவுடாலாக மட்டுமே பேசி வருகிறது. திமுக அரசு ஆட்சியா மக்கள் நலனா என்று வரும் போதெல்லாம் மக்கள் நலன் மட்டுமே காவு கொடுக்கப்பட்டுள்ளது. கச்சதீவு, காவிரி நீர் பங்கீடு என அனைத்து பிரச்சனைகளிலும் திமுக அரசு அவ்வாேறே செயல்பட்டு வருகிறது. காவிரி நதி நீர் பங்கீட்டில்  விவகாரத்தில் திமுக எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், காங்கிரஸ் கூட்டணி வேண்டும் என்பதற்காக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் திமுக சுயநலமாக செயல்படுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுக இந்த விவகாரத்தில் கர்நாடகாவில் நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். வரும் 6 ஆம் தேதி துவங்கி தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் பூரண மது விலக்கு அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.  ஆகஸ்ட் 15 க்குள் 100 பொது கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும்” என்றார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண