Trichy Power Shutdown Tomorrow: திருச்சி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. அதில் உங்கள் ஏரியா இருக்கா என்று செக் செய்து கொள்ளுங்க. மேலும் மின் சம்பந்தப்பட்ட உங்கள் தேவைகளை முன்கூட்டியே செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
திருச்சி இ.பி.சாலை துணை மின்நிலையத்தில் நாளை (10ம் தேதி) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் இ.பி. சாலை, மணிமண்டப சாலை, காந்தி சந்தை, கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித் தெரு, பூலோக நாதர் கோயில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணாபுரம் சாலை, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டர்வொர்த் சாலை, கீழ ஆண்டார் வீதி.
மலைக்கோட்டை, மேலரண் சாலை, பாபு சாலை, குறிஞ்சி கல்லூரி, விஸ்வாஸ் நகர், வேதாத்ரி நகர், ஏ.பி. நகர், லட்சுமிபுரம், உக்கடை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என திருச்சி மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோட்டம்
இதேபோல ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் நாளை (10ம் தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
அதன்படி ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி, வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரைவீதி, மேற்கு சித்திரை வீதி, அடைய வளைஞ்சான் தெருக்கள், திருவானைக்காவல், சன்னதி வீதி, சீனிவாச நகர், நரியன் தெரு, நெல்சன் ரோடு, அம்பேத்கார் நகர், பஞ்சகரை ரோடு, அருள் முருகன் கார்டன்.
ஏ.யு.டீ. நகர், ராகவேந்திரா கார்டன், காந்தி ரோடு, டிரங்க் ரோடு, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை ரோடு, கீழகொண்டையம் பேட்டை, ஜம்புகேஸ்வரர் நகர், தாகூர் தெரு, திருவென்னை நல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக் போஸ்ட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர், இயக்கலும் , காத்தலும் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.
எனவே பொதுமக்கள் முன்கூட்டியே அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனவும் செல்போன் சார்ஜ் போட்டுக் கொள்ளவும் மேலும் குடிநீர் போன்றவற்றை முன்னெச்சரிக்காது சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.