விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ளது சேத்தூர். இங்கு 12 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றதாக சைல்டுலைன் அமைப்பின் 1098 என்ற இலவச எண்ணுக்கு தகவல் வந்துள்ளது. அத்தகவலை தொடர்ந்து மாவட்ட சைல்டுலைன் களப்பணியாளர் அன்புச்செல்வி உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய மகளிர் ஊர் நல அலுவலர் கோவிந்தம்மாள் மற்றும் அலுவலர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கும், சேத்தூர் மேட்டுப்பட்டியை சேர்ந்த 22 வயது இளைஞரை திருமணம் செய்தது தெரிய வந்துள்ளது.  இதனையடுத்து அதிகாரிகள் சேத்தூரில் உள்ள திருமணமான வாலிபரின் வீட்டை விசாரித்து இரவில் அங்கு சென்றனர். அப்போது அங்கிருந்த உறவினர்கள் சிறுமியையும், மாப்பிள்ளையையும் முதலிரவு அறைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் போலிசார் உடனடியாக இருவரையும் அழைத்து வருமாறு தெரிவித்தனர்.

  


பின் இருவரையும் அழைத்து வந்தனர். உடனடியாக சிறுமியை மீட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் இரு குடும்பத்தினரையும் விசாரித்ததில் இருவரும் உறவினர்கள் என்பதும் இருவருக்கும் திருமணம் செய்ய பேசி முடித்த நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் பழகி வந்துள்ளனர்,  இந்த நிலையில் இரு வீட்டாரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்தது தெரிய வந்துள்ளது.  இது குறித்து அலுவலர் கோவிந்தம்மாள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக அவரை திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தொடர்ந்து சிறுமியின் தாய், தந்தை, திருமணமான இளைஞரின் பெற்றோர் என 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலிரவு அறைக்கு சென்ற சிறுமியை மீட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண