தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கிராமம் கலைஞர் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்தனகுமார்(33). இவரது மனைவி கௌசல்யா(25). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

Continues below advertisement


இந்த நிலையில், சந்தனகுமார் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும்போது மது போதையில் வந்துள்ளார். அதை பார்த்த அவரது மனைவி கௌசல்யா சந்தனகுமாரை கண்த்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின் மனமுடைந்த கெளசல்யா தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி புறப்பட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த சந்தனகுமார் கையில் கிடைத்ததை வைத்து கௌசல்யாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.


பின்னர் மதுபோதையில் இருந்த சந்தனகுமார் ஆத்திரத்தில் தான் வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து கௌசல்யாவின் தலையில் வீசியுள்ளார். இதனால் கௌசல்யாவின் தலையில் வெடிகுண்டு வெடித்து கௌசல்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அருகாமையில் இருந்த பொருள்களும் சேதமடைந்தன. பயங்கர சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, கௌசல்யா இரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த செங்கோட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சந்தனகுமாரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் வயலுக்கு வரும் பன்றிகளை விரட்ட வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்த நிலையில் அதனை எடுத்து மனைவி தலையில் வீசியதாக தெரிகிறது. இருப்பினும் பன்றிகளை விரட்ட தான் நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்தாரா? அவருக்கு நாட்டு வெடிகுண்டு எப்படி கிடைத்தது? அவரே தயார் செய்தாரா? இல்லையெனில் வேறு யாரேனும் கொடுத்தார்களா? என்பது குறித்தும் செங்கோட்டை போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் மனைவி மீதே நாட்டு வெடிகுண்டை வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண