தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் துரைராஜ் என்பவரது மகன் இசக்கி ராஜா வயது 21. இவர் கடந்த 22.05.2018 அன்று கடையநல்லூரில் பைக்கில் செல்லும்போது மதுரை டிப்போவை சேர்ந்த அரசு பஸ் இவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் இசக்கிராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து இசக்கி ராஜின் தந்தை துரைராஜ் திருநெல்வேலி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடுத்தார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மாடசாமி இவ்வழக்கில் ஆஜரானார். இந்த வழக்கில் 2019 ஆண்டு ஆகஸ்டு 27-ஆம் தேதி நீதிமன்ற உத்தரவு மனுதாரருக்கு சாதகமாக வந்துள்ளது. அதில் மனுதாரருக்கு 12 லட்சத்து 97ஆயிரம் ரூபாய் மற்றும் வட்டி வழக்கு செலவு உட்பட 16 லட்சத்து 67 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவினை ஏற்று அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கவில்லை இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட விபத்து இழப்பீடு சம்பந்தமாக சமரச தீர்வு மையத்தில் இந்த வழக்கு எடுத்து செல்லப்பட்டு தீர்வு காணப்பட்டது.
அதில்14 இலட்சத்து 70 ரூபாய் இரண்டு மாதத்திற்குள் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தீர்வு காணப்பட்டது. இந்த உத்தரவையும் போக்குவரத்துக் கழகம் மதிக்காததால் இன்று காலை நீதிமன்ற அமினா சிவக்குமார் தலைமையில், வழக்கறிஞர்கள் முன்னீர்பள்ளம் S.மாடசாமி, T.கண்ணன் ஆகியோர் மதுரை அரசு போக்குவரத்து கழகத்திற்கு பாத்தியப்பட்ட 2 அரசு பஸ்களை நெல்லை பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வைத்து ஜப்தி செய்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அரசு மருத்துவமனை கட்டில் உடைந்து பச்சிளங் குழந்தைக்கு காயம்.. மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி..