விருதுநகர் மாவட்ட சாத்தூர் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிக்கு தவறுதலாக ஹெச்.ஐ.வி பாதிகப்பட்ட நபரின் ரத்தம் செலுத்தப்பட்ட சம்பசம் கடந்த சில வருடங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அரசு சார்பாக பல்வேறு உதவிகள் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டது. மேலும் அது தொடர்பாக மதுரை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு இழப்பீடுகளும் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனையிலும் கண்காணிக்கப்பட்டது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தரமற்ற கட்டில் விழுந்ததில் 5 நாட்கள் குழந்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் பரங்கிநாதபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி என்பவரின் மனைவி முத்துலட்சுமிக்கு இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த புதன் அன்று விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாளே இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாய் மற்றும் குழந்தை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எதிர்பாராத விதமாக அரசு மருத்துவமனையில் கட்டில் உடைந்து கூடவே குழந்தையும் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது எடுத்து குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்ததாகவும் குழந்தையின் தலையில் பலத்த காயம் இருப்பதாகவும் குழந்தையின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
நேரமாகியும் குழந்தையை கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்காத மருத்துவ நிர்வாகத்தை கண்டித்தும் தரமற்ற கட்டில் போன்ற வாகனங்கள் மருத்துவமனையில் இருப்பதாக பெற்றோர்கள் உறவினர்கள் குற்றம்சாட்டினர் இதையடுத்து குழந்தை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் சிறிது நேரம் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது அரசு மருத்துவமனைகளில் கட்டில் உடைந்து குழந்தை காயம் அடைந்து இருப்பது விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறுகையில், “குழந்தை இருந்த கட்டிலில் நான்கு நபர்கள் அமர்ந்ததால் கட்டில் சேதமடைந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த பிரச்னையும் ஏற்பட்டதற்கு பின் ஆய்வு செய்து சரிசெய்வததைவிட பொதுவாகவே நிர்வாகத்தினர் தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணிக்கும் போது இது போன்ற தவறுகளை தவிர்க்க முடியும்” என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - திண்டுக்கல் : சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் புதிதாக வாட்டர் சைக்கிள் படகு அறிமுகம்..