கன்னியாகுமரி குமரி மாவட்டத்தில் 35 நாள்களில் 1217 பேர் கொரோனாவால் பாதிப்பு. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

 

குமரி மாவட்டத்தில் கடந்த மாதத் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்து வந்தது. அதன் பிறகு பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியது. திருவட்டார், மேல்புறம், குருந்தன்கோடு ஒன்றியங்களில் ஏராளமா னோர் பாதிப்புக்கு உள்ளா னார்கள். இதை தொடர்ந்து சுகாதார துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். இருப்பினும் நாகர்கோவில், தோவாளை, தக்கலை பகுதிகளிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. கடந்த வார இறுதியில் தினசரி கொரோனா பாதிப்பு 100-ஐ நெருங்கியிருந்தது. இதனால் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் சோதனையை தீவிர படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். தினமும் 900-க்கும் மேற்பட்டவருக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

 

மாவட்டம் முழுவதும் 938 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் 47 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதில் 25 பேர் ஆண்கள், 22 பேர் பெண்கள் ஆவார்கள். இதில் 3 குழந்தைகளும் அடங்கும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் மட்டும் 12 பேருக்கு தொற்று உறுதி யாகி உள்ளது. ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரியில் ஏற்கனவே மருத்துவ மாணவர்கள், டாக்டர்கள் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை யில் இருந்து வருகிறார் கள். இந்த நிலையில் நேற்று மேலும் 2 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு ள்ளது. இதை யடுத்து சக மாணவர்களுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

 



 

 

கடந்த மாதம் 3-ந்தேதி முதல் தற்போது வரை 35 நாட்களில் குமரி மாவட்டத்தில் 1217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிர படுத்தியுள்ளனர். மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலை யங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பொதுமக்கள் பலரும் குறிப்பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். மேலும் பூஸ்டர் தடுப்பூசியும் பலரும் செலுத்தவில்லை. எனவே தடுப்பூசி செலுத்தாதவர்கள் அனை வரும் பக்கத்தில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று உடனடியாக தடுப்பு செலுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார் அந்த வகையில் இன்று மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.