கன்னியாகுமரியில் மண்ணுளி பாம்பை விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த வழக்கில் கரூர் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த அரவிந்த் மற்றும் அவரது கூட்டாளி ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கட ரமணன் ஆகிய 2 பேரை வனத்துறையினர் இன்று கைது செய்தனர். கைதான இருவரிடம் இருந்து சுமார் 3.5 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பு மற்றும் சொகுசு கார் பறிமுதல்.



 

 

தமிழகத்தில் உள்ள வன விலங்குகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்த வகையில் கடந்த 23 ஆம் தேதி கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரம் என்னும் பகுதியில்
  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அரவிந்த் தான் புதிதாக கட்டி வரும் வீட்டில் மண்ணுளி பாம்பு பதுக்கி வைத்துள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது , இதனை தொடர்ந்து அந்த வீட்டில் வனத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர் அப்போது அங்கு ஒரு அறையில் மண்ணுளிப் பாம்பை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதனை மீட்ட வனத்துறையினர்.

 


 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர் மேலும் தலைமறைவான அரவிந்தை தேடி வந்த நிலையில் அவர் கரூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்தது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் தலைமறைவாக இருந்த அரவிந்த் மற்றும் அவரது கூட்டாளி ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கட ரமணன் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் கைதான இருவரிடம் இருந்து சுமார் 3.5 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பு மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

மண்ணுள்ளிப் பாம்பு என்பது சாதாரண ஒரு உயிரினம் அதற்கு எந்த அதிசய சக்தியும் இல்லை என எனவும் பொதுமக்கள் இது போன்று மண்ணுளி பாம்பை பிடித்து விற்பனை செய்யும் தகவல் கிடைத்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலர் இளையராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.



குமரி மாவட்ட போலீசாருக்கு சவால் விடும் விதமாக சினிமா பட பாணியில் ஜோக்கர் முகமூடி அணிந்து ஏடிஎம், நகைக்கடை உள்ளிட்டவைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களில் ஒருவரை 6 மாதங்களுக்கு பின் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.

 

குமரி மாவட்டத்தின் குளச்சல் சரகத்திற்கு உட்பட்ட குளச்சல், கருங்கல்,நித்திரவிளை, கொல்லங்கோடு உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்கள், நகைக்கடைகள், மொபைல் கடைகளில் முகமூடி, தலையில் குல்லா,குடை உள்ளிட்டவை அணிந்து திரைப்பட பாணியில் தொடர் திருட்டு சம்பவங்களை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்து வந்தது. இந்த திருட்டில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்கள் குறித்த எந்த தடயங்களும் போலீசாருக்கு கிடைக்காமல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில் அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பத்ரி நாராயணன் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவு பிறப்பித்து இருந்தார்.



 

அதன் பேரில் குளச்சல் சரக துணை கண்காணிப்பாளர் தங்கராமன் கண்காணிப்பில் தனிப்படை போலீசார் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கேரளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் தேடுதல் வேட்டை நடத்திவந்த நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் கொல்லங்கோடு அருகே சுனாமி காலனி பகுதியில் பாழடைந்து கிடந்த ஒரு வீட்டிலிருந்து செல்போன் கடைகளில் இருந்து திருட்டு போன ஒருசில மொபைல் போன்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் திருட்டு நடைபெறும் போது பயன்படுத்திய உடைகள் உபகரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட நபர்கள் இந்த சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த நபர்கள்தான் என்ற கோணத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பை நடத்தி வந்தனர். ஆனால் குற்றவாளிகள் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் தினம் தினம் மாறி மாறி தங்கி போலீசாருக்கு போக்கு காட்டி வந்தனர்.



 

இந்த நிலையில் கொல்லங்கோடு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் நேற்று இரவு திருமஞ்சனம் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது சந்தேகப்படும்படியான விதத்தில் ஒருநபர் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார் அந்த நபரை பார்த்தபோது ஏடிஎம் நகை கடைகள் உள்ளிட்டவற்றில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் போல் தெரிந்ததை தொடர்ந்து காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அப்போது சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரின் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் நகைகள் இருந்தது தெரியவந்தது அப்போது தப்பி ஓட முயன்ற நபரை போலீசார் மடக்கி பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்து நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர்தான் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் என தெரியவந்தது.

 



 

மேலும் திருட்டில் கிடைத்த நகைகளை விற்பனை செய்ய எடுத்து சென்றதும் தெரியவந்தது.இதனைதொடர்ந்து போலீசார் அவர்களது பாணியில் பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் வள்ளவிளை பகுதியை சேர்ந்த ஷலால் கஸ்பாஸ் என்ற ஷாலு ( வயது 24) என்றும் கருங்கல், குளச்சல், நித்திரவிளை கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல ஏடிஎம் மையங்கள், நகை கடைகள் மற்றும் மொபைல் கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தது அவரும் தூத்தூர் பகுதியை சேர்ந்த அவரது நண்பரான ஜிம்சன் என்ற மிதின் என்பவரும் சேர்ந்து திருட்டு தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பிடிபட்ட நபரிடம் இருந்து 22 சவரன் தங்க நகை மற்றும் 25 க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மொபைைல் போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் தலைமறைவாகி இருக்கும் மற்றொரு குற்றவாளியான ஜிம்சன் என்ற மிதினை தேடி வருகின்றனர்.