ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சேர்ந்தகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (52) இவர் அருப்புக்கோட்டை யில் ஜெயவிலாஸ் என்ற தனியார் பேருந்தில் செக்கர் ஆக பணி புரிந்து பணி இடை நீக்கம் செய்ய பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் தான் வேலை இடை நீக்கம் செய்ய பட்டதற்கு தன்னுடன் வேலை பார்க்கும் அருப்புக்கோட்டை யை சேர்ந்த தங்கபாண்டி, வேல்முருகன், மணி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய 4 பேர் தான் காரணம் என்று எழுதி வைத்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து உறவினர்கள் பேரையூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து கமுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு முருகனின் உடல் கொண்டு வர பட்டது. இதனிடையே முருகன் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், எழுதி வைத்த 4 பேரும் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சினை ஏற்படும் என்பதாலும் போலீசார் கமுதி அரசு மருத்துவமனையில் குவிக்க பட்டனர்.


'பிரேத பரிசோதனை நடத்த இழுத்தடித்த காரணம் என்ன..?




கமுதி அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை செய்து கொள்ளுமாறு கூறியதால், உள்ளூரில் அரசு தாலுகா மருத்துவமனை இருக்க ஏன் ராமநாதபுரம் கொண்டு செல்ல சொன்னார்கள் என உறவினர்கள் குழம்பினர். பின்னர் போலீசாரின் நடவடிக்கையால் வேறு மருத்துவர் கொண்டு பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. அத்தோடும் பிரச்சனை தீரவில்லை. 


'போலீசாருடன் தள்ளுமுள்ளு'




பிரேத பரிசோதனை முடிந்த பின்பும் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் உறுதியாக இருந்தனர். அப்போது போலீசாருக்கும் முருகனது உறவினர்களுக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் அவர்களிடம் குற்றவாளிகளை கைது செய்வோம் என்று உறுதி அளித்த பின்பு முருகன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க பட்டது.


'காவல்துறையினர் விளக்கம்'


இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பேரையூா் காவல் நிலைய சரகத்திற்கு உள்பட்ட சோ்ந்தக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சிவன் மகன் முருகன் (52). இவா் விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியாா் பேருந்து நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதகராக இருந்துள்ளார். இந்நிலையில் புதன்கிழமை 'சோ்ந்த கோட்டை' கிராமத்தில் அவரது வீடு அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு சோதனை செய்ததில் அவரது சட்டைப்பையில் தற்கொலைக்குத்தூண்டியதாக 4 நபா்களின் பெயா்களுடன் கடிதம் இருந்துள்ளது.




இதுகுறித்து முருகனின் சகோதரி ஆறுமுகம் அளித்தப் புகாரின் பேரில் முருகனுடன் பணியாற்றும் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த தங்கப்பாண்டி, மணி, வேல்முருகன், பன்னீா்செல்வம் உள்ளிட்ட 4 போ் மீது தற்கொலைக்கு தூண்டுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.




மேலும், சாதி மோதலை தடுக்கும் விதமாக, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுடக்கூடும் எனக்கருதி முருகனின் சடலத்தை போலீஸாா் முதுகுளத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனா். ஆனால் கமுதி அரசு மருத்துவா்கள் விதிகளை மீறி பிரேதப் பரிசோதனை செய்ய முடியாது என்று மறுத்தால் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லயோலா இக்னேஷியஸ் தலைமையில், ராமநாதபுரத்திலிருந்து சிறப்பு மருத்துவரை வரவழைத்து பிரேதப் பரிசோதனை நடத்தி உறவினா்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது என கூறினர்.


'தண்டிக்க வேண்டும்- உறவினர்கள்'


இது தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட  உறவினர்கள் தரப்பில் பேசும்போது, முருகனை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டும் போதாது அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். உடன் பணிபுரிந்த வரை பல்வேறு வகையில் இவர்கள் நெருக்கடி கொடுத்ததால் தான் அவர்களின் பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என ஆதங்கப்பட்டனர்.