நிதிநிலை அறிக்கையில் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுமா என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு.




தீப்பெட்டி தொழிலை நம்பி உள்ள ஆறு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் சுமார் 2500 தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.




பெட்ரோல் டீசல் விலை உயர்வு, லாரி வாடகை உயர்வு, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மேலும் இத்தொழில் பின்னடைவு சந்தித்து உள்ளது. இதற்கு இடையே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி விற்பனையும் வெகுவாக சரிந்து உள்ளது. எனவே இந்த நிதியாண்டில் செய்யப்படவுள்ள மத்திய நிதிநிலை அறிக்கையில் பிளாஸ்டிக் லெட்டரில் இறக்குமதி தடை விதிக்க வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.




இதுகுறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறும்போது, "வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டிகளுக்கு 11 சதவீதம் ஊக்கத்தொகை மத்திய அரசு வழங்கி வந்தது சிறிது சிறிதாக இது குறைக்கப்பட்டு தற்போது 1.5% மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் உள்நாட்டிலேயே சந்தையில் போட்டி போட்டு விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.




பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அந்த நாட்டு அரசு 20% ஊக்கத்தொகை அளித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால்  நாள் தீப்பெட்டி தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டி காண ஊக்கத்தொகையை மீண்டும் 11 சதவீதமாக உயர்த்த வேண்டும்,வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும். தீப்பெட்டி தயாரிப்புக்கு தேவையான இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு வழங்கப்படும் வங்கிக் கடன் தொகையை 5 கோடியாக உயர்த்த வேண்டும் இந்தக் கடனுக்கான வட்டி விகிதத்தையும் குறைக்க வேண்டும் எனக் கூறும், இவர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, தொழிலாளர்களின் கூலி உயர்வு, மூலப்பொருட்களின் விலை விலை ஏற்றம் உள்ளவற்றால் தீப்பெட்டியின் அடக்கச் செலவு அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்ப தீப்பெட்டி சந்தையில் விற்பனை விலை கிடைக்காததால் மிகவும் தீப்பெட்டி தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது. நிதிநிலை அறிக்கையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்" என்கிறார்.