நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என செங்கோல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களடம் கூறுகையில், "மீண்டும் மோடி, வேண்டும் மோடி" பாரத பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்க வேண்டும். நாடாளுமன்றத்தில் செங்கோலை நரேந்திர மோடி அரசாங்கம் நிறுவி இருக்கிறது. இது சிவசெங்கோல். செங்கோல் வழி ஆட்சி செய்வது என்பது தமிழர் மரபு. பாரதீய மரபு. நெல்லையப்பர் கோவிலில் சிவ செங்கோல் வழிபாடு நடைபெற்றது. மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்ற பிரார்த்தனை நெல்லையப்பர் திருவடிகளில் வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்தப் பிரார்த்தனை வெற்றி பெறும். இந்த சிவசெங்கோல் என்றும் நாடாளுமன்றத்தில் நீடித்து நிலை பெற வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.
உலகத்திலேயே நீதி, சட்டம், ஜனநாயகம் என்ற அடிப்படையில் ஒரு தலைசிறந்த ஜனநாயக ஆட்சியாக மோடியின் தலைமையிலே இன்று இந்தியா இருக்கிறது. உலகத்தில் பல இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அதிகமான முஸ்லிம் மக்களை கொண்ட நாடு பாரத நாடு. இந்திய நாட்டில் இங்கே முஸ்லிம் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். அவர்கள் சாத்தானின், சைத்தானின் பிள்ளைகள் அல்ல. பாரத தாயின் பிள்ளைகள். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பாரத தாயின் பிள்ளைகள். எல்லோரும் இந்த செங்கோலை ஏற்றுக் கொண்டார்கள். யாருக்கும் அச்சுறுத்தலோ, யாருக்கும் பாகுபாடு இல்லாமல் எல்லா மதத்திற்கும் பொதுவான சட்டம் பொது சிவில் சட்டம்கொண்டு வர வேண்டும். மணிப்பூரில் நடைபெற்று வருவது தவறு. அந்த தவறுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 16 பெண்கள் நிர்வாணமாக வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். குக்கி இன மக்கள் இந்தியர்கள் கிடையாது. அவர்கள் பர்மாவிலிருந்து இங்கு வந்தவர்கள். அவர்கள் அங்குள்ள தமிழர்களை தாக்கினார்கள். மணிப்பூர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள். இந்த ஒற்றுமையை சிலர் வேண்டுமென்று இதனை தூண்டி விடுகிறார்கள். பெண்களுக்கு எதிராக கொடுமை நடந்தால் அவர்களின் மீது மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து ஊடுருவி கம்யூனிஸ்டுகள் கிறிஸ்துவ மிஷனரிகள் இதனை தூண்டி விடுகிறார்கள்.
பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் சொல்ல வந்த அவரை பதில் சொல்ல விடாமல் தடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாங்கள் சந்திக்க தயார். மோடிக்கு எதிரான பிரச்சாரங்கள் தமிழகத்தில் கொண்டு வரப்படுகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. திமுக கட்சியில் மகளிரணியில் சென்று கேட்டுப் பாருங்கள். தமிழகத்தில் பாதுகாப்பு இருக்கிறதா என கேளுங்கள்? பெண்களுக்கான உரிமை தொகை என்பது எல்லாருக்கும் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பல விதிமுறைகள் அதற்கு கடைபிடிக்கப்படுகிறது. கிறிஸ்துவர்களுக்கு மட்டும்தான் கனிமொழி எம்பியாக இருக்கிறார். மற்ற இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார. தொழில் வளத்தை தடுப்பது, மின்சாரத் தயாரிப்பை எதிர்ப்பது, வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பது, ஸ்டெர்லைட், கூடங்குளம் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பது என தென் மாவட்டங்கள் வளராமல் போனதற்கு இவர்களை போன்றவர்கள் தான் காரணம்.
நெல்லை மாவட்டத்தில் தொழில்கள் வளராமல் தென் தமிழகம் வளராமல் பார்த்துக்கொண்டது சர்ச்சுகள் தான். சர்ச் எதற்காக இருக்கிறது? பைபிள் படிப்பதற்கும், பிரார்த்தனை செய்வதற்கும் தானே உள்ளது? ஆனால் அங்கு உட்காந்து யாருக்கு ஓட்டு போடுவது என பேசுவதால் தான் சீமான் சொல்கிறார் சாத்தானின் பிள்ளைகள் என்று. சீமான் போன்றோர் கருத்துக்கு ஏன் தவறாக விவாதம் செய்கிறீர்கள்? சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற கருத்தை நான் பேசுவதற்கும் சீமான் பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் பேசுவதில் இருக்கும் நோக்கம் வேறு. அவர் பேசுவதில் இருக்கும் நோக்கம் வேறு. இந்த சர்ச்சுகளும், இந்த மாவோயிஸ்டுகளும் தென் மாவட்டங்களை வளர விடாமல் தடுத்து உள்ளனர். கனிமொழி போன்றவர்கள் அவர்களின் ஓட்டுக்காக அடிமையாக இருக்கிறார்கள். இது திமுகவிற்கே பேராபத்தாக முடியும். திமுக அரசு கொள்ளிக்கட்டையால் தலையால் சொரிகிறது இதற்கான பாதிப்பு அவர்களுக்கே தெரியும்” என தெரிவித்தார்.