ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள அவரது உருவப் படத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்.


ராமச்சந்திர ஆதித்தனார் நினைவு நாள்:


தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, 10 ஆண்டு நினைவு நாளில் அவர் தமிழை எவ்வளவு நேசித்தார்.  தந்தையை போலவே தமிழுக்காகவே பாடுபட்டார். இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர் படுகொலை செய்திகளை வெளியிட்டார். அந்த அளவிற்கு அவர் விளம்பரம் செய்து கொள்ளாமலேயே தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும் பத்திரிக்கை மூலமாக சேவை செய்தார் என்பதை நினைவு கூறுகிறோம்.


அவரது பெருமைகள் ஓங்கட்டும் என்றார். நாடார்களுக்கு சொந்தமான மெர்கண்டைல் வங்கியை மீட்பதற்கு முழு முயற்சியை மேற்கொண்டவர் ராமச்சந்திர ஆதித்தனார். அதற்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சந்திப்பதற்கு தான் ஏற்பாடு செய்து அவரோடு பணியாற்றியதையும் வைகோ நினைவு கூர்ந்தார் ராமச்சந்திர ஆதித்தனாரின் பெயரும் புகழும் என்றும் அழிக்க முடியாது என்று தெரிவித்தார்.




மாற்றம் வராது:


தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது மதம் சார்ந்த முழக்கம் எழுப்பப்பட்டது தொடர்பான கேள்விக்கு, விளையாட்டில் சாதி மதம் வரக்கூடாது. விளையாட்டு துறையில் எந்த நாடுகளாக இருந்தாலும் சாதியும், மதமும் அதிலே தலையிடக்கூடாது. அதிலே நுழையக்கூடாது. அந்த நோக்கமே சிதைந்து போய்விடும், எல்லா நாடுகளிலும் போட்டிகள்  நடக்கின்றன.


உலக யுத்தத்தின் போதே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன என்றார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி உள்ள நிலையில் மாற்றுக் கட்சிகள் அதிமுகவோடு இணைவதற்கு வாய்ப்புள்ளதா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், வேறு கட்சிகள் வரும் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். எந்த மாற்றமும் இருக்காது என்றார்.


எந்த பயனும் இல்லை:


தொடர்ந்து காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனை குறித்த கேள்விக்கு, தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதில் கர்நாடகா உடும்பு பிடியாக இருக்கிறார்கள். அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பயனும் இருக்காது என்று தெரிவித்தார். கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளுமே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக  உள்ளனர் என தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண