அதிமுக தலைமை கழக அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்ட விவாகரத்தில் எந்த நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் அதிமுக அதனை எதிர்கொள்ளும் என அதிமுகவைத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நாகர்கோவில் வந்த தமிழ் மகன் உசேன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    

கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் அஇஅதிமுக செயலாளராக இருந்து தற்போது கழகத்தின் அவை தலைவராக பொறுப்பேற்றுள்ள அஇஅதிமுக கழக அவைத்தலைவர் தனது சொந்த மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு வருகை புரிந்த தமிழ் மகன் உசேனுக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், பொதுவுடமை தியாகி ஜீவானந்தம், மார்சல் நேசமணி, பெருந்தலைவர் காமராஜர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 



 

பின்னர் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்"அஇஅதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் தன் மீது நம்பிக்கை வைத்து அனைத்து ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட மூத்த நிர்வாகியான தன்னை புரட்சி தலைவருடன், புரட்சித்தலைவியுடனும் பயணித்ததன் அடிப்படையில் நான் தான் வரவேண்டும் இந்த இயக்கத்திற்கு அவை தலைவராக வரவேண்டும் என்று ஒட்டுமொத்த பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மூத்த கழக நிர்வாகிகள் அனைவரும் வழிமொழிந்து ஆதரவு தந்து அவை தலைவராக நியமித்துள்ளனர். இதற்கு நன்றியாக அதிமுக வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் ஒத்துழைப்பையும் நல்குவேன் என்ற உறுதி கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் தலைமை கழக அலுவலகம் பூட்டி சீல் வைத்ததற்கு சென்னை உயர்நீதிமன்ற வழங்கிய  தீர்ப்பு ஜனநாயக ரீதியாக கிடைத்த மிகச்சிறந்த தீர்ப்பு என தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. 

 



 

99 சதவீதம் அதிமுக நிர்வாகிகள் இடைகால பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமை ஏற்று இருக்கிறது. இந்த இயக்கத்தை பொறுத்த வகையில் 66 எம்எல்ஏக்களில் 63 எம்எல்ஏக்கள் எடப்பாடியார் தலைமை ஏற்றுள்ளனர். அதேபோன்று அஇஅதிமுக நிர்வாகிகளும் செயற்குழு, பொதுக்குழு, எம்எல்ஏக்களும் தங்களுடன் இருப்பதால் தேர்தல் ஆணையம் எடப்பாடியார் தலைமையை மட்டுமே அங்கீகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அதிமுகவை முடக்க எந்த நீதிமன்றத்துக்கும், முறையிடுக்கும் சென்றாலும் அதனை எதிர்கொள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.