வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் சார்பில் நெல்லையில் பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது, அப்போது அவர்கள் கூறியதாவது, உலகெங்கும் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி நபர்களின் மக்கள் தொகை 30 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் 2010 ஆம் ஆண்டு அறிக்கை படி சீனாவிற்கு அடுத்ததாக உலகின் மிகப்பெரிய விரிந்து பரவிய புலம்பெயர் இனம் இந்தியர்கள் ஆகும். வெளிநாடுகளில் கல்விக்காக செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2007 ம் ஆண்டு கணக்கின்படி 1,53,000 ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.


கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்தது. அதனை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளில் இதற்கான திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய சட்டத்துறையை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. 2024ல் நாடாளுமன்ற தேர்தலில் தகுதியுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் அந்தந்த நாடுகளில் இருந்தபடியே வாக்களிக்க செய்யும் வழியில் உரிய சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வெளிநாடு வாழ் தமிழர் நல சங்கத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். மேலும் கையெழுத்து இயக்கம் இதற்காக தொடங்கி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று நாட்டின் ஜனாதிபதியிடம் வழங்க உள்ளோம். மத்திய அரசுக்கு இந்த கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக முதல்வரை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை முன் வைப்போம் என தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண