கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் செட்டித்தெரு பகுதியை சேர்ந்த வாலிபர் ஐயப்பன் இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தம்பானூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் அவர் தனது பணியை பார்த்துக்கொண்டு இருந்த போது திடீரென அறிவாளுடன் வந்த நபர் ஒருவர் சற்றும் தாமதிக்காமல் நாற்காலியில் அமர்ந்து இருந்த ஐயப்பன் மீது கொடூர தாக்குதல் நடத்தினார்.
திடீரென நடந்த தாக்குதலால் செய்வதறியாமல் திகைத்த ஐயப்பன் கைகள், தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாறிய வெட்டிவிட்டு ரத்த வெள்ளத்தில் இருந்த ஐயப்பனை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து அந்த வாலிபர் தப்பி சென்றார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த உடன் சம்பவ இடம் வந்து ஐயப்பன் உடலை கைப்பற்றிய போலீசார் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சிகப்பு சட்டை அணிந்து இரு சக்கர வாகனத்தில் அறிவாளுடன் வந்த நபர் ஐயப்பனை கொடூரமாக கொலை செய்த காட்சிகள் பதிவாகி இருந்தது இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த முன்விரோதத்தை மனதில் வைத்திருந்த ஹரீஷ் இன்று காலை அறிவாளுடன் வந்து அங்கு பணியில் இருந்த ஐயப்பனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததாக கூறி உள்ளார் இதனையடுத்து திருவனந்தபுரம் போலீசார் நெடுமங்காடு போலீசாரின் கஸ்டடியில் இருக்கும் ஹரீஸை திருவனந்தபுரம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த 6 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த கேரளா போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். ஐயப்பனை கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.