கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் துப்பாக்கியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட விருதுநகரை சேர்ந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே நெய்யூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தாசன் மகன் ஜெபராஜ் (39).

 


 


வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை - குடும்பத்துடன் கம்பி எண்ணும் மாப்பிள்ளை


இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். இதனால் பதறிப்போன அவர் சத்தம் எழுப்பவே அருகில் இருந்தவர்கள் வந்துள்ளனர். அவர்களையும் துப்பாக்கியை காட்டி மிரட்டிய மர்ம நபர் ஜெபராஜ் பாக்கெடில் இருந்த  1500 ரூபாயையும் பறித்துச் சென்று விட்டார்.





 


புத்தாண்டு அன்று இரவு கோயில்களை திறப்பதற்கு தடை இல்லை - அமைச்சர் சேகர்பாபு


இதுகுறித்து ஜெபராஜ் கொடுத்த புகாரின்  துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்த மர்ம நபரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி ராமகிருஷ்ணன் மகன் மதுரை என்ற சேர்மராஜ் (26) என்பதும்  இவர் மீது 2 கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.





 


முதல்வரின் தஞ்சை விசிட் - கும்பகோணத்தை தனிமாவட்டமாக்க கோரி ஊர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்


சமீபத்தில் அங்கிருந்து இங்கு வந்து குடும்பத்துடன் நெய்யூரில் வாடகை வீட்டில் வசித்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்களையும் பறிமுதல் செய்த  போலீசார் சேர்மராஜை கைது செய்தனர். துப்பாக்கியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.