தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தனியார் வசமாகும் சரக்கு பெட்டக முனையம்

சரக்குப் பெட்டக முனையம் ரூ.434.17 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதனால், துறைமுகம் கூடுதலாக ஆண்டுக்கு 6 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளுவதற்கான வசதியை பெறும்.

Continues below advertisement

தமிழ்நாட்டிலேயே சரக்கு பெட்டகம் கையாளுவதில் 2வது பெரிய துறைமுகமான வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் ஆண்டுக்கு 1.17 மில்லியன் சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டு உள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்குபெட்டகங்கள் கையாளுவதில் 2021-22-ம் நிதியாண்டில் 7.81 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாண்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகத்தின் சரக்கு பெட்டக போக்குவரத்தின் ஒருங்கிணைந்த வருடாந்திர வளர்ச்சி விகிதம் 6 சதவீதம் ஆகும்.

Continues below advertisement


வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் 2024-25-ம் ஆண்டில் 1.16 மில்லியன் சரக்கு பெட்டகங்களும், 2034-35-ம் ஆண்டுகளில் 2 மில்லியன் சரக்கு பெட்டகங்களும் கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வ.உ.சி. துறைமுகத்தில் ஏற்கனவே 2 சரக்குபெட்டக முனையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் ஒரு சரக்கு பெட்டகம் முனையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இதற்காக இந்திய அரசின் பொது-தனியார் கூட்டமைப்பு கொள்கையின் படி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தால் டெண்டர் கோரப்பட்டது. இதில் ஜெ.என்.பக்ஸி போர்ட் லாஜஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நிறுவனம், தூத்துக்குடி இன்டர்நேஷனல் கன்டெய்னர் டெர்மினல் பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனம் மூலம் வ.உ.சி துறைமுகத்தில் 3-வது சரக்குபெட்டக தளத்தை அமைக்க உள்ளது.


இதனை தொடர்ந்து வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் 9-வது பொது சரக்கு தளத்தை சரக்கு பெட்டக முனையமாக மாற்றுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் தா.கி. ராமச்சந்திரன், தூத்துக்குடி சர்வதேச சரக்கு பெட்டக முனையம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில், ஜே.எம்.பக்ஸிபோர்ட்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனர் துரவ் கோடக் ஆகியோர் கையெழுத்திட்டனர். வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத்தலைவர் பிமல்குமார் ஜா, தலைமை எந்திரபொறியாளர் வி. சுரேஷ் பாபு, தலைமை ஆலோசனை அதிகாரி தமல் ராய், பெருநிறுவன விவகார தலைவர் சந்தீப் வாத்வா, தலைமை செயல்பாடு அதிகாரி கிருஷ்ணதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், சரக்குப் பெட்டக முனையம் ரூ.434.17 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதனால், துறைமுகம் கூடுதலாக ஆண்டுக்கு 6 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளுவதற்கான வசதியை பெறும். இதன் கட்டுமான பணிகள் 21 மாதங்களில் முடிவடைந்து டிசம்பர் 2024 மாதம் பயன்பாட்டுக்க வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் கூறும் போது, புதிதாக அமைக்கப்பட உள்ள சரக்கு பெட்டக முனையம் 370 மீட்டர் நீளமும் மற்றும் 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டு இருக்கும். 8 ஆயிரம் சரக்கு பெட்டகங்கள் ஏற்றி வரும் பெரிய கப்பல்களையும் இந்த தளத்தில் கையாள முடியும். இந்த வசதி மூலம் வர்த்தக முதலீடு பெறுவதற்கு ஏதுவாக அமைவது மட்டுமின்றி தென்தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்க வழிவகுக்கும் என்று கூறினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola