சிறைவாசத்தில் ஏற்பட்ட பழக்கத்தால், நட்பு அதிகரித்து போனதன் காரணமாக நண்பரின் ஆசையை நிறைவேற்ற கஞ்சா கேட்ட நண்பருக்கு கோர்ட்டுக்கே கஞ்சா பொட்டலங்களை கொண்டு சென்று போலீஸ் வேனுக்குள்ளே வீசிய சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
"கோர்ட்டுக்குள் கஞ்சா"
ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 24). இவர் குற்ற வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தபோது அங்கு மற்றொரு வழக்கு விசாரணைக்காக மாவட்ட சிறையில் இருந்து கீழக்கரையை சேர்ந்த கருப்பையா மகன் நிர்மல்ராஜ் (23) என்பவரும் வந்துள்ளார். இவர்கள் இருவரும் ராமநாதபுரம் மாவட்ட சிறையில் ஒன்றாக இருந்தபோது பழக்கமானதால் அதன் அடிப்படையில் பேசி உள்ளனர். அப்போது நிர்மல்ராஜ், கார்த்திக்கிடம் தான் நாளை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருவதாகவும் தனக்கு கஞ்சா வாங்கித்தரும்படியும் கேட்டுள்ளார். சிறையில் ஒன்றாக இருந்த பழக்கத்தின் அடிப்படையில் நண்பர் கேட்டதால் தட்டிச் சொல்லாத கார்த்திக் அதற்கு சம்மதித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் காலை மாவட்ட சிறையில் இருந்து ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் தாசன் தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்புடன் கைதிகளை ராமநாதபுரம் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். இவர்கள் வழக்கு விசாரணை முடிந்து நீதிமன்றத்துக்கு வெளியில் இருந்த காவல்துறை வாகனத்தில் ஏற முயன்றனர். அப்போது அங்கு வந்த கார்த்திக், நிர்மல்ராஜுக்கு காவல்துறை வாகனத்தின் ஜன்னல் பாதுகாப்பு கம்பி வழியாக கஞ்சா பொட்டலத்தை கொடுக்க முயன்றுள்ளார். இதனை கண்ட சப்-இன்ஸ்பெக்டர் தாசன் அவரை பிடிக்க முயன்றபோது கார்த்திக் தப்பி ஓடியுள்ளார். பின்னர் சிறிது தூரம் ஓடி கார்த்திக்கை கஞ்சாவுடன் மடக்கி பிடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் அங்கு விரைந்து சென்று கார்த்திக்கை கைது செய்தனர்.
ராமநாதபுரம் கோர்ட்டுக்கு வழக்கு விசாரணைக்கு வந்த கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாம் இது குறித்து விசாரித்தபோது,ராமநாதபுரம் எம்.எஸ் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (24). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர், நேற்று முன்தினம் ராமநாதபுரம் நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வந்திருக்கிறார். அங்கு மற்றொரு வழக்கு விசாரணைக்காக மாவட்டச் சிறையில் இருந்து கீழக்கரையைச் சேர்ந்த நிர்மல்ராஜ் (23) என்பவர் போலீஸாரால் அழைத்து வரப்பட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே மாவட்டச் சிறையில் ஒன்றாக இருந்தபோது பழகி, நண்பர்களாகி உள்ளனர். அந்தப் பழக்கத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இருவரும் சந்தித்து அடிக்கடி நேரில் பார்க்க முடிக்கவில்லையென மிகவும் ஃபீல் பன்னி பேசியிருக்கின்றனர். அப்போது நிர்மல்ராஜ், தான் மீண்டும் நாளை விசாரணைக்கு போலீஸாரால் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படவிருப்பதாகவும், தனக்கு கஞ்சா பொட்டலம் வாங்கித் தரும்படியும் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கஞ்சா பொட்டலத்துடன் கார்த்திக் நீதிமன்றத்தில் நேற்று காத்திருந்தார். அப்போது நிர்மல்ராஜை ஜீப்பில் அழைத்துவந்த போலீஸார் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்குள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் நிர்மல்ராஜ் அருகில் கார்த்திக் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. வெளியே வரும் நிர்மல்ராஜிடம் எப்படியாவது கஞ்சா பொட்டலங்களை கொடுத்துவிட வேண்டும் என அவரை அழைத்துவந்த போலீஸ் ஜீப் அருகே கார்த்திக் நின்றிருக்கிறார். விசாரணை முடிந்து வெளியே கொண்டுவரப்பட்ட நிர்மல்ராஜை போலீஸார் வேகமாக ஜீப்பில் ஏற்றி உள்ளனர். அப்போது வேறு வழியின்றி ஜீப்பில் நிர்மல்ராஜ் அமர்ந்திருந்த இடத்தின் பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக நைசாக கஞ்சா பொட்டலங்களை கார்த்திக் திணித்துள்ளார். இதை அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீஸார் பார்க்கவே, உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிய அவரை போலீஸார் விரட்டிச் சென்று நீதிமன்றத்தின் வெளியே சுற்றிவளைத்துப் பிடித்தனர். இதையடுத்து அவரை கேணிக்கரை போலீஸில் ஒப்படைத்ததாக சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
"சிறைச்சாலையா அல்லது சொர்க்க பூமியா"
குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதால் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் சிறைவாசி ஒருவர் நன்பரிடம் கஞ்சா கேட்க அவருடைய "ஜெயில்மெட்" நண்பரும் கையில் கஞ்சாவை எடுத்துக் கொண்டு கோர்ட் காம்பவுண்ட் வரை சென்ற சம்பவத்தை வெறுமனே கடந்து செல்ல முடியாது.,சிறைக்குள் சர்வசாதாரணமாக போதை பொருள்கள் உபயோகிக்க முடியும் என்பதும் அங்கு போதைப்பொருட்கள் புழக்கத்தில் இருக்கிறது என்பதும், வெளியில் இருப்பவர்களை விட ஜெயிலில் உள்ளே இருப்பவர்கள் மிக ஜாலியாகவும் சந்தோசமாகவும் இருக்கிறார்கள் என்பதும் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.