கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே விரிவிளை பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த ப்ரைட் (47) கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது சகோதரர் டென்னீஸ் (55), ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மனைவி குழந்தைகள் குடும்ப தகராறு காரணமாக பிரிந்து இருக்கும் நிலையில் சகோதரர்கள் இருவரும் பழுதடைந்த குடும்ப வீட்டில் சேர்ந்து வசித்து வருகின்றனர். இருவரும் மது போதைக்கு அடிமை என் கூறப்படுகிறது. தினமும் இரவு நேரத்தில் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்வது வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி இரவு அண்ணன் தம்பி இருவரும் மது குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டு ப்ரைட் வீட்டில் இருந்த பாத்திர பண்டங்களை எல்லாம் அடித்து உடைத்து உள்ளார்.

 



 

இதனால் ஆத்திரமடைந்த டென்னீஸ் வீட்டில் வாங்கி வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து ப்ரைட் மீது ஊற்றி தீ வைத்து உள்ளார் தீ உடல் முழுவதும் பற்றி எரிந்து வீட்டின் வெளியே சுருண்டு விழுந்த ப்ரைட் தீ எரிந்து முடிந்த உடன் தீக்காயங்களுடன் தானாகவே எழுந்து வீட்டினுள் சென்று படுத்துள்ளார். அருகிலேயே மது போதையில் அமர்ந்திருந்த டென்னீஸ் போதை தெளிந்த உடன் மீண்டும் மதுக்கடைக்கு சென்று மது வாங்கி வந்து குடித்து போதையை ஏற்றி கொண்டு ஒன்றும் தெரியாதது போல் அருகிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் தீக்காயங்களுடன் படுத்திருந்த ப்ரைட் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 



 

ப்ரைட் உயியிழந்ததும் தெரியாமல் மது போதையில் இருந்த டென்னீஸ் இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்க்காக தாயாரன போது அங்கு ப்ரைட்டை தேடி அவரது நண்பர் ஒருவர் வந்துள்ளார் அப்போது டென்னீஸ் அந்த நபரிடம் ப்ரைட் தூங்குவதாக கூறி நாடகமாடி உள்ளார் சந்தேகமடைந்த அந்த நபர் வீட்டின் உள்ளே ஏறி செல்ல முயன்றபோது தடுத்ததாக கூறப்படுகிறது அப்போது வீட்டினுள் பார்த்தபோது ப்ரைட் உடல்முழுவதும் தீக்காயங்களுடன் இறந்த நிலையில் படுத்து கிடந்துள்ளார் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் டென்னீஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் இறந்த நபரின் உறவினர்களிடம் இருந்து புகார் பெற்றுகொண்டு போலீசார் ப்ரைட்டின் உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் கைதான டென்னீஸிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.