நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதன் ஒரு பகுதியாக நெல்லை நீர்வளம் என்ற அமைப்பின் மூலம் நீர் நிலைகள் பராமரிக்கப்பட்டு கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லை நீர்வளம் என்ற அமைப்பின் மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட வி.எம்.சத்திரம் பகுதியில் உள்ள 36 ஏக்கர் பரப்பளவு கொண்ட  மூர்த்தி நயினார்குளம் புனரமைக்கப்பட்டு கரை பலப்படுத்தப்பட்டுள்ளது.   இந்த பணியினை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில்,

Continues below advertisement

நெல்லை மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. பருவமழையை எதிர் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில்  600 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது.   நெல்லை நீர்வளம் சார்பாக 100க்கும் மேற்பட்ட குளங்களின் கரைகள் பலப்படுத்தப்பட்டு தூர்வாரப்பட்டு நீர் நிலைகளை பாதுகாக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இயங்கி கொண்டிருக்கும் கட்டுப்பாட்டு அறைகளும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி இருக்கிறதோ அதனை பொதுமக்கள் தெரிவிக்கும் வண்ணம் கடந்த ஆண்டு முதல் இணையதள செயலி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டும் அதே நடைமுறையில் உள்ளது. எனவே அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,

Continues below advertisement

 

நெல்லை மாவட்டத்தில் மூன்று வகையிலான  வெள்ள பாதிப்பு உள்ளது. ஒன்று தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் கொள்ளளவு 60 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் செல்ல முடியும்.. மாவட்டத்தின் முக்கிய அணைகள் பாபநாசம், மணிமுத்தாறு. பாபநாசம் அணையில்  42 சதவீத தண்ணீரும்,  மணிமுத்தாறு அணையில்  29 சதவீத தண்ணீரும்  இருப்பில் உள்ளது. அதே போல இரண்டாவது வகையிலான வெள்ளபாதிப்பு என்றால் மாநகராட்சி பகுதியில் உள்ள இடங்கள், மாவட்டத்தில் கடந்த ஆண்டு 74 இடங்கள் பதட்டமான நீர் தேங்கும் வெள்ள அபாய பகுதியாக கண்டறியப்பட்டது.  தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு  அது குறைந்து 63 பகுதிகள் தான் பதட்டமான பகுதியாக குறியீடு செய்யப்பட்டுள்ளது. மாநகரப் பகுதிகளில் 230 கிலோமீட்டர் நீளத்திற்கு கால்வாய்கள் தூர்வார செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் மனக்காவலம் பிள்ளை நகர், சேவியர் காலனி பகுதியில் தண்ணீர் தேங்காத வகையில் அதன் இயற்கை திசை போக்கை மதிப்பீடு செய்து சீர் செய்யப்பட்டுள்ளது. வேய்ந்தான்குளம் தூர்வாரப்பட்டு கூடுதலாக 2 டி.எம்.சி தண்ணீர் பிடிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும் பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் கால்வாய்கள், நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டக் கூடாது என்றும் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என தெரிவித்தார். அதேபோல மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி, பாபநாசம் மலைப்பகுதியில் காணிமக்கள் ஆற்றைக் கடக்கும் வகையில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் வனத்துறை சார்பில் மரப்பாலம் அமைக்கப்படுவதாகவும் கூறினார்.