தூத்துக்குடியில் ரூ 55.29 கோடி மதிப்பேட்டில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தனசேகரன் நகரில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கரிசில் இலக்கியப் பூங்காவை திறந்து வைத்தார்.கரிசல் இலக்கியப் பூங்காவில் நடைபயிற்சிக்கு தனிப்பகுதி சிறுவர்கள், சைக்கிள் ஓட்டுவதற்கு தனிப்பகுதி என பல்வேறு வசதிகளுடன் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வாங்கும் திறனுக்கேற்ற வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 528 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் தலா ரூ 10.47 லட்சம் மதிப்பிலான வீடுகள் சொந்தமாக வீடு மற்றும் நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கப்பட உள்ளது.இதில் மத்திய அரசு சார்பில் ரூ 1.50 இலட்சம்,மாநில அரசு சார்பில் ரூ 7 லட்சமும் மானியமாக வழங்கப்படும், பயனாளிகள் தங்கள் பங்கு தொகையாக ரூ 1.97 லட்சம் செலுத்தினால் போதும்.
இந்த திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.சொந்தமாக நிலமோ வீடோ இருக்கக் கூடாது இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் பெற விரும்பும் தகுதியான நபர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது கட்டப்படும் 528 வீடுகளில் 250 வீடுகளுக்கான பயணிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள பயனாளிகளும் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டம் மூலம் பயனை பயனாளிகள் சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன