குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 21,519 பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. இதையடுத்து பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. தற்பொழுது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று மாவட்டம் முழுவதும் 682 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 23 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 9 பேர் ஆண்கள் 14 பேர் பெண்கள் ஆவார்கள். குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 21,519 பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
கன்னியாகுமரி பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வாலிபரை ஆசாரிபள்ளம் பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சேர்த்து போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதார துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜெயில் கைதி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்