திருச்செந்தூரில் நடைபெறவிருக்கும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
சூரசம்ஹாரம்:
ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும், இந்த விழாவுக்காக முருக பக்தர்கள் ஆறு நாள் விரதம் இருந்து ஏழாம் நாள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைப்பெறும், அந்த வகையில் இந்த ஆண்டு சஷ்டி விரதம் அக்டோபர் 22 ஆம் தேதி அன்று தொடங்கிய நிலையில் வரும் 27 ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைப்பெற்ற உள்ளது. இதற்காக முருக பக்தர்கள் அதிகளவில் திருச்செந்தூர் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னை, கோவை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கபட உள்ளன.
சிறப்பு பேருந்துகள் இயக்க விவரம்:
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்27/10/2025 (திங்கட்கிழமை) சூரசம்ஹாரத்தை முன்னிட்டு 26/10/2025 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரிலிருந்தும் பொது மக்கள் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு அன்று திருச்செந்தூருக்கு சென்று தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்சூரசம்ஹாரம் இதன்படி வருகின்ற 27/10/2025 (திங்கட்கிழமை) வருவதால் திருச்செந்தூருக்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனடிப்படையில் வருகின்ற 26/10/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கு மற்றும் 27/10/2025 திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.மேற்கூறிய இடங்களிருந்து www.tnstc.in மற்றும் Tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனவே. பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
சுபமுகூர்த்த தினம்:
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம்.மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம். ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 24/10/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 365 பேருந்துகளும். 25/10/2025 (சனிக்கிழமை) 445 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை. நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 24/10/2025 மற்றும் 25/10/2025 ஆகிய நாட்களுக்கு 120 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர். திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 24/10/2025 மற்றும் 25/10/2025 ஆகிய நாட்களுக்கு 40 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 9.164 பயணிகளும் சனிக்கிழமை 8,575 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 16,108 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.