தூத்துக்குடி நகர்ப்புற துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை மறுநாள் (7.7.2026, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து தூத்துக்குடி நகர்ப்புற மின் விநியோக செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Continues below advertisement

தூத்துக்குடி நகர்ப்புற துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை மறுநாள் (7.7.2026, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நகரின் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

போல்பேட்டை, ஆண்டாள்தெரு, சத்திரம்தெரு, 1-ஆம் கேட், 2-ஆம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச்ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டையாபுரம் ரோடு, தெப்பகுளம் தெரு, சிவன் கோவில் தெரு, வ.உ.சி ரோடு, ஜெயிலானி தெரு.

வடக்கு காட்டன் ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், சண்முகபுரம், மேலசண்முகபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம், இஞ்ஞாசியார்புரம்.

எழில்நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், முத்தம்மாள்காலனி, சுந்தரவேல்புரம், அம்பேத்கார்நகர், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம்.

பக்கீள்புரம், லோகியா நகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.