சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழங்கியுள்ள தீா்ப்பின்படி, இக்கோயில் உள்ளே பக்தா்கள் கைப்பேசிகளை பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 14.11.2022 முதல் திருக்கோயிலுக்குள் கைப்பேசி பயன்படுத்துவதற்கான தடை அமலில் உள்ளது.  தற்போது, நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்தும் பொருட்டு புதன்கிழமை இன்று (ஜூலை 1) முதல் கைப்பேசி பயன்படுத்துவதற்கான தடையை மிகத் தீவிரமாக அமல்படுத்தப்படும். அதன்படி பக்தா்கள் முழுமையாக பரிசோதனைக்குப் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா்.

Continues below advertisement

எனவே, கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்கள் கைப்பேசிகளை, தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ, பாதுகாப்பாக வைத்துவிட்டு சுவாமி தரிசனத்துக்கு வர வேண்டும். கைப்பேசிகளை பாதுகாக்க கோயில் நிா்வாகம் சாா்பில் ஆங்காங்கே கைப்பேசி வைப்பிடங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றை பக்தா்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். பரிசோதனையின் போது பக்தா்களிடம் கைபேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்து பாதுகாப்பு பெட்டகங்களில் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோயில் நிா்வாகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Continues below advertisement

தற்போது அந்த உத்தரவை முழுமையாக செயல்படுத்தும் வகையில், பொதுத் தரிசன வரிசை, ரூ.100 விரைவு தரிசன வரிசை, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தங்களது கைபேசிகளை தங்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு கோயிலுக்கு வருமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பக்தர்களின் வசதிற்க்காக கோயில் வளாகத்தின் பல இடங்களில் கைபேசி வைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வசதிகளை பயன்படுத்தி கைபேசிகளை ஒப்படைத்து விட்டு தரிசனம் செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பரிசோதனையின் போது பக்தர்களிடம் கைபேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அவசர தேவைகளுக்காக மருத்துவ மையம், ஆம்புலன்ஸ் சேவை, பொது அறிவிப்பு அமைப்பு, மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, இன்று ஜூலை 1 முதல் கோயிலுக்குள் கைபேசி இன்றி தரிசனம் செய்ய பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நிர்வாகம் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை கோவிலின் ஆன்மிக சூழலை பாதுகாப்பதற்கும், தரிசன ஒழுங்கை மேம்படுத்துவதற்கும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.