தூத்துக்குடி மாவட்டத்தில் 110 மருத்துவ குழுக்கள் பல்வேறு இடங்களில் முகாம்களை நடத்தி வருகின்றனர் என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.




தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், கோரம்பள்ளம் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு மருத்துவ முகாமை தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் பார்வையிட்டார்கள்.




அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி எம்பி கனிமொழி செய்தியாளர்களளை சந்தித்து கூறுகையில், இதுவரை நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் 32,430 பேர் இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றிற்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.. தூத்துக்குடி மாவட்டத்தில் 110 மருத்துவ குழுக்கள் பல்வேறு இடங்களில் முகாம்களை நடத்தி வருகின்றனர்... தேவைப்படக்கூடிய இடங்களுக்கு சென்று அவர்கள் மருத்துவ உதவிகளை செய்து கொண்டிருக்கின்றனர்.. திருநெல்வேலி மாவட்டத்தில் 30 இடங்களிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 36 இடங்களிலும் தென்காசி 30 என மொத்தம் 26 மருத்துவ குழுவினர் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை 916 மருத்துவ முகங்கள் நடத்தப்பட்டுள்ளது.. இதில் 58 ஆயிரம் பேர் பயன் அடைந்து இருக்கிறார்கள். இன்று மதுரை அப்பல்லோ, வேலம்மாள், வடமலையான், மீனாட்சி மிஷன் உள்ளிட்ட 50 தனியார் மருத்துவமனைகளோடு இணைந்துசிறப்பு மருத்துவ முகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.. இது மட்டுமின்றி சிறப்பு மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்கள் நடமாடும் மருத்துவ குழுக்கள் இங்கே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


தூத்துக்குடி மாவட்டத்தில் 140 துணை சுகாதார நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.. பல சுகாதார நிலையங்களில் சுற்றுச்சூழல் உடைந்துள்ளது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கணக்கெடுத்து உடனடியாக சரி செய்ய தேவையான நிதியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தருவதாக கூறியுள்ளார். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பி விட்டதால் அங்குள்ள மருத்துவ குழுக்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்கள் என்றார்.




அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், ”தூத்துக்குடி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேங்கியுள்ள மழை நீர் விரைவில் முற்றிலுமாக அகற்றப்படும்.. மேலும், தண்ணீரில் இருந்து தொற்று பரவல் பரவுவதை தடுப்பதற்காக குளோரின் மாத்திரை வழங்கப்படும்.. இருபது லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவில் இதற்காக குளோரின் மாத்திரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு வீட்டுக்கும் 10 மாத்திரைகள் வழங்கப்படும் அதனை இருபது லிட்டர் தண்ணீருக்கு ஒரு மாத்திரை என்ற விகிதத்தில் போட்டு இரண்டு மணி நேரம் கழித்து பயன்படுத்த வேண்டும்” என்றார்.


உடன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.