தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காலியாக உள்ள 300 பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk)

காலியிடங்கள்: 100சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் Rs.5,285+ DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/- ஆகியவை வழங்கப்படும்.கல்வி தகுதி: பி.எஸ்.சி (அறிவியல் & விவசாயம்) மற்றும் இளங்கலை பொறியியல் முடித்தவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

2. பருவகால உதவுபவர் (Seasonal Helper)காலியிடங்கள்: 100சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் Rs. 5,218 + DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/- ஆகியவை வழங்கப்படும்.கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

3. பருவகால காவலர் (Seasonal Watchman)காலியிடங்கள்: 100சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் Rs. 5,218 + DA (Rs.5087/-) + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்து படி Rs.120/- ஆகியவை வழங்கப்படும்.கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:SC & SCA/ ST பிரிவினர் – 18 to 37 வயதுBC/ BC(M)/ MBC பிரிவினர் – 18 to 34 வயதுOC பிரிவினர் – 18 to 32 வயது

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்கள் சுயவிர குறிப்புடன் கூடிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவண நகல்களை சுய சான்றொப்பமிட்டு, இணைத்து, கீழ்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி :மண்டல மேலாளர்,மண்டல அலுவலகம்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்,C 42,43&44 | சிப்காட் காம்ப்ளக்ஸ்,மீளவிட்டான்,மடத்தூர் (அஞ்சல்)தூத்துக்குடி - 8.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2025