தூத்துக்குடியில் 452 கோடியில் புதுப்பிக்கப்பட்ட விமானநிலையத்தை பிரதமர் மோடி இன்று இரவு திறந்து வைக்கவுள்ள நிலையில் இன்று தூத்துக்குடியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

போக்குவரத்து மாற்றம்:

இது குறித்து மாவட்ட காவல்த்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தூத்துக்குடி விமான நிலையம் புதுப்பிக்கப்பட்ட புதிய முனையம் திறப்பு விழாவிற்கு 26.07.2025 அன்று வருகை தரும் மாண்புமிகு பாரத பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக மேற்கொள்ளப்படும் போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு சம்மந்தமான அறிவிப்புகள்.

அனுமதி இல்லை:

நிகழ்ச்சி நடைபெறும் 26.07.2025 அன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையில் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் எந்த ஒரு கனரக (Heavy Vehicles) மற்றும் சரக்கு வாகனங்களும் செல்வதற்கு அனுமதி கிடையாது. குறிப்பாக வாகைகுளம் விமான நிலையத்தை கடந்து செல்வதற்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது.

Continues below advertisement

மாற்று வழி:

மேலும் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி அல்லது ஸ்ரீவைகுண்டம் செல்லும் மற்ற வாகனங்கள் விமான நிலையத்தை கடந்து செல்ல முடியாத பட்சத்தில் அவைகள் மங்களகிரி விலக்கில் வலது புரமாக திரும்பி மேல கூட்டுடன்காடு, அல்லிகுளம், பேரூரணி, திம்மராஜபுரம், வர்த்தகரெட்டிபெட்டி, வாகைகுளம் ஜங்ஷன் வழியாக செல்லவும்.

அதே போல் திருநெல்வேலி மற்றும் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து வரும் மற்ற வாகனங்கள் விமான நிலையத்தை கடந்து செல்ல முடியாத பட்சத்தில் அவைகள் வாகைகுளம் ஜங்ஷன், வர்த்தகரெட்டிபெட்டி, திம்மராஜபுரம், பேரூரணி, அல்லிகுளம், மேல கூட்டுடன்காடு, மங்களகிரி விலக்கு வழியாக செல்லவும்.

விமான பயணிகளுக்கு:

நிகழ்ச்சி நடைபெறும் அன்று நிகழ்ச்சிக்கு வருகை தரும் மிகமுக்கிய நபர்களின் வாகனங்ளை தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் விமான நிலையத்தின் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது.

மேலும் அன்றைய (26.07.2025) தேதிதில் தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயண நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு (Arrive 3 Hours early) (बंक விமான நிலையம் வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பாஸ் வைத்திருப்பவர்கள்:

Pass Holders வாகனங்கள் வாகைகுளம் Toll Gate அருகில் உள்ள வேலவன் நகர் வழியாக சென்று. Pass Holders-க்கான வாகன நிறுத்தத்தில் நிறுத்தவும். அதே போல் நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து விமான நிலையம் செல்லும் மெயின் Entrance-ன் வலதுபுறம் (மேற்கு பகுதி) மற்றும் இடதுபுறம் (கிழக்கு பகுதி) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் நிறுத்திவிட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்லவும். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுவார்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் காவல்துறை சூழ்நிலைக்கேற்ப மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தகுந்த ஒத்துழைப்பு கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது