தமிழ்நாட்டில் மின்வாரியம் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதற்காக, குறிப்பிட்ட பகுதிகளில் ஒரு நாள் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படும். பொதுவாக, மின்தடை விவரம் முன்கூட்டியே அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இந்த நேரத்தில், சிறிய பழுதுகளை சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பின்வரும் கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் உள்ள பகுதிகளில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்யப்படும். இது குறித்து வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோட்டைகருங்குளம் துணைமின் நிலையத்தில் நாளை 6.11.2025, வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்குறிப்பிட்ட துணைமின் நிலையத்தில் மின்விநியோகம் தடை செய்யப்படும். எனவே பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் கீழே குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.
கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழை தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்குகள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கல்லிடைக்குறிச்சி கோட்டம் விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி துணைமின் நிலையங்களில் நாளை 6.11.2025, வியாழக்கிழமை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம், பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.
அதன்படி காரையார், சேர்வலார், பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, கோட்டைவிலைபட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், A.P.Nadanur, தூப்பாகுடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம், சம்பன்குளம், செல்லப்பிள்ளையார்குளம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம், அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், திரேஷ்நகர், ஹைசிங்போர்டு, குமரன்நகர், காமராஜ்நகர், டேவிஸ்புரம் சாகிர்உசேன்நகர், சுனாமிநகர் நேரு காலனி கிழக்கு, ஜீவாநகர், லூர்தம்மாள்புரம், தாளமுத்துநகர், கோயில்பிள்ளைவிளை, ஆரோக்கியபுரம் T.சவேரியார்புரம், மாதாநகர், ராஜாபாளையம், சிலுவைபட்டி, கிருஷ்ணராஜாபுரம்,
முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளப்பட்டி, தருவைகுளம் பனையூர், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டிணமருதூர், உப்பளபகுதிகள், பனையூர், ஆனந்தமாடன்பச்சேரி, வாலசமுத்திரம், மேலமருதூர், அ.குமாரபுரம், மேலமருதூர், திரேஸ்புரம், மேலஅலங்காரதட்டு, மாணிக்கப்புரம், பூபாலராயர்புரம், குருஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தையார் காலனி, வெற்றிவேல்புரம், ராமர்விளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.