தூத்துக்குடி மாவட்ட வருவாய்த் துறை வேலை வாய்ப்பு; 77 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கான தேர்வு முறையாக விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழக அரசின் வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் வட்டம் வாரியாக காலியாக உள்ள 77 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.11.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கிராம உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 77

காலியிடங்களின் விபரம்

விளாத்திகுளம் – 13

திருச்செந்தூர் – 7

ஸ்ரீவைகுண்டம் – 4

சாத்தான்குளம் – 8

ஒட்டப்பிடாரம் – 5

கோவில்பட்டி – 7

கயத்தார் – 21

எட்டையபுரம் – 10

ஏரல் – 2

கல்வித் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2025 அன்று 21 வயது நிரம்பியவராகவும் 32 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இருப்பினும் தமிழக அரசு விதிகளின் படி BC, MBC, BCM பிரிவினர் 39 வயது வரையிலும், SC, SCA, ST, ஆதரவற்ற விதவை பிரிவினர் 42 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கூடுதலாக 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். 

சம்பளம்: ரூ. 11,100 – 35,100

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு வாசித்தல் மற்றும் எழுத்துத் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://thoothukudi.nic.in/notice/applications-are-invited-for-village-assistant-post-2025/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விபரங்கள் அறிய https://thoothukudi.nic.in/notice/applications-are-invited-for-village-assistant-post-2025/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

இதேபோல் தூத்துக்குடியில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 7) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக, ஆட்சியா்  இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.தனியாா் நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்று ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளனா். 10, 12, பட்டப் படிப்பு, BE,DIP, ITI, DRIVER, COMPUTER OPERATOR தகுதியுடைய தனியாா் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள வேலை நாடுநா்கள் சுயவிவரம், கல்விச் சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்கலாம். பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ரத்து ஆகாது. வேலையளிப்போரும், வேலை நாடுநா்களும் www.tnprivatejobs.tn.gov.i nஎன்ற இணையதளத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்யவேண்டும். கூடுதல் தகவல்களை தூத்துக்குடி வேலைவாய்ப்பு அலுவலக டெலிகிராம் சேனலில் இணைந்தோ, அலுவலக தொலைபேசி எண் 0461-2340159-ஐ தொடா்பு கொண்டோ பெறலாம் என தெரிவித்துள்ளார்.