பள்ளி படிப்பின்போது தூய்மை பணியை நான் மேற்கொண்டேன் என்று விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.




 
தூத்துக்குடி தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி மில்லா்புரம் புனித மாியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தாளாளா் சகோதரர் ஆரோக்கியம் பீட்டர் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துைற அமைச்சர் கீதாஜீவன் 148 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கி பேசுகையில் "தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தமிழகம்முழுவதும் உள்ள மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. 


தமிழக முதலமைச்சர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அதில் பேசுகையில் கல்வி மருத்துவம் இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசுவார் கல்வித்துறைக்கென்று அதிக நிதிஓதுக்கீடு செய்து எல்லோரும் கல்வியின் மூலம் உயர வேண்டும். என என்னுவார், அதே போல் மருத்துவ துறையை பொறுத்தவரை எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். என்ற எண்ணத்தில் அதை கருத்தில் கொண்டு செயல்படுவார் அது மட்டுமின்றி முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் எல்லா துறைகளுக்குமே பொற்காலம் தான் பள்ளி படிப்பின் போது உயர் பதவிகளுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி கொள்ள வேண்டும். 




எந்த பணியாக இருந்தாலும் அதை செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் முடியாது என்பது நம் மனதில் வரக்கூடாது. நான் பள்ளி படிக்கும் காலத்தில் தூய்மை பணியை மேற்கொண்டுள்ளேன். கல்வியில் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும். எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவது நீங்கள் தான் ஆசிாியர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை கவனமாக படிக்க வேண்டும். அது புாியாமல் இருக்கின்ற மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆசிாியர்களின் அறிவுரைகள் தான் உங்களை நல் ஓழுக்கம்படுத்தி செல்கிறது. 




எல்லா குடும்பத்திலும் தாய் தந்தையர்கள் பொிய படிப்புகள் படித்திருக்க வாய்ப்பு இருக்காது. ஆனால் தன்னுடைய பிள்ளைகள் நம்மைவிட உயர் படிப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உங்களை படிக்க வைக்கின்றனர் அதிலும் சிலர் வீடுகளை அடமானம் வைத்தும் விற்பனை செய்தும் கல்வியை முடித்தபின் நல்ல பணிகளுக்கு சென்ற பின் நமக்கு நன்றிகடனாக இருந்து நம்முடைய தாய் தந்தையா் நிலையை உயர்த்துவார்கள். என்று உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் வாழ்கிறார்கள் அதற்கு நீங்கள் ஏற்றார் போல் வாழ கற்றுக்கொள்ளுங்கள் எல்லா விஷயத்திலும் ஆசைப்படுவதிலும் ஆர்வம் இருக்க வேண்டும். அதிலும் நல்ல பழக்க வழக்கங்கள் தான் உங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.


ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெற்றோர்கள் வழங்கும் நல்ல உணவுகளை உட்கொள்ளுங்கள் அப்போது தான் உடலில் உள்ள அனைத்து இயந்திரங்கள் நல்ல முறையில் செயல்படும் விலை இல்லா மிதிவண்டி மூலம் பலனடைந்துள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்ச்சியடைகிறேன். இந்த பள்ளியில் எல்லா விஷயத்திலும் நேர்மையாக இருக்கும் நிா்வாகமாகும்" என்றார்.