பாஜக ஆட்சி நீடிக்க வேண்டுமானால் ஆந்திர பீகார் எம்.பிக்கள் தயவு தேவை என்பதால் அறிவித்து உள்ளார்கள்-கனிமொழி எம்பி




பொது பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்துவிட்டதாக மத்திய பாஜக அரசை கண்டித்து உங்களுடைய நம்பிக்கையை பெற்ற தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.பொது பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் தமிழகத்தை வஞ்சித்துவிட்டதாக மத்திய பாஜக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்தது.




இதைத் தொடர்ந்து தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்  சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்பி பேசுகையில், நிதிநிலை அறிக்கை என்பது இரு மாநிலங்களுக்கு மட்டுமே அறிவித்துள்ளார்கள். நாங்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறோமா அல்லது ஆந்திரா பீகார் சட்டமன்றத்தில் இருக்கிறோமா என்று எண்ணும் வகையில்,ஏதோ ஒரு மாநிலத்தின் நிதி நிலை அறிக்கை என்பது போல் உள்ளது, தொடர்ந்து மாநில உரிமைகளை பறித்துக் கொண்டு மாநில வரிகளை பறித்துக் கொண்டு மாநிலங்களுக்கு வரவேண்டிய நிதியை தரவில்லை என்றால் மாநிலத்தை எப்படி நிர்வாகிப்பது. மக்களுக்கு தேவையான சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என கேள்வி எழுப்பினார். தங்களது ஆட்சி காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என குற்றம் சாட்டிய கனிமொழி,எந்த நிதி நெருக்கடி வந்தாலும் அதை செயல்படுத்தி காட்டிக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.


தங்களுக்கு வாக்களிக்காத மக்களை வஞ்சிக்கின்ற ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி செயல்படுவதாக கனிமொழி எம்பி குற்றம் சாட்டினார்.சென்ற ஆண்டு கூட இந்த ஆண்டு குறைவான நிதியே மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டிய அவர், தமிழக மட்டுமின்றி கிராமப்புறங்களில் இருக்கின்ற சாமானிய மக்களின் ஏமாற்றக்கூடிய ஒரு பட்ஜெட் தான் இந்த மோடி ஆட்சியினுடைய பட்ஜெட் என்றார்.


மேலும் பேசுகையில், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக அவர்களை பாதுகாக்கின்ற பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் உள்ளது என்றார். பணக்கார முதலாளிகளை வளர்த்து விடுகின்ற திட்டங்கள் மட்டுமே உள்ளது அதானி, அம்பானிகளுக்கான  பட்ஜெட்டாக உள்ளது.இப்படி மக்கள் விரோத பட்ஜெட் ஆக பாஜகவின் பட்ஜெட் உள்ளது. தமிழ்நாடு மக்களுக்கு எதிரான நல்லாட்சி எதிராக உள்ள இந்த மத்திய பாஜக அரசு விரைவில் பதவியிலிருந்து இறக்கி காட்டுவோம் வேண்டும் என்றார்.