பாஜகவுக்கு ஆதரவாக யார் இல்லை என்றாலும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளை வைத்து மிரட்டி கொண்டு இருக்கிறார்கள் என்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி எம்பி குற்றம் சாட்டினார்




வருமான, அமலாக்கத்துறை வைத்து மிரட்டல்:


தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மாநில தலைவர் பார்வதி சண்முக சாமி வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு தெரிவித்தனர். அவருக்கு திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி சால்வை அணிவித்து வரவேற்பு தெரிவித்தார். பின்னர் வேட்பாளர் கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜகவுக்கு ஆதரவாக யார் இல்லை என்றாலும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளை வைத்து மிரட்டி கொண்டு இருக்கிறார்கள். யார் மீது விசாரணை குற்றம் சுமத்தப்படுகிறதோ அவர்கள் பாஜகவில் இணைந்தால் வாஷிங் மெஷினில் போட்டு கழுவி சுத்தப்படுத்தி விடுவார்கள்.




பிரதமருக்கு தேர்தல் ஜூரம்:


மழைக்காலத்தில் தூத்துக்குடி பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஆடு மாடுகள் மழை வெள்ளத்தில் உயிரிழந்தது. அப்போது வராத பிரதமர் தேர்தல் நேரத்தில் தேர்தல் ஜுரம் வந்ததற்கு பிறகு அடிக்கடி வந்து மக்களை சந்தித்து வருகிறார். இதை மக்கள் புரிந்து செயல்படுவார். திமுக தலைவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளை பார்த்து தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் திமுக கூட்டணி இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு பார்வதி சண்முகசாமி இன்று அவர்களுடைய கூட்டமைப்பின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள் .


 




தூத்துக்குடி வின் பாஸ்ட் கார் நிறுவனம் இன்னும் பல நிறுவனங்கள் தூத்துக்குடிக்கு வரவேண்டும். இதன் மூலம் ஆண்கள் பெண்கள் என பல பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோளாக இருக்கும். மத்திய அரசிடம் வைக்கக்கூடிய ஒரு சில கோரிக்கைகள் ரயில்வே போன்ற கோரிக்கைகள் பலமுறை வைத்தால் தான் நிறைவேற்றி தரக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. 10 ஆண்டுகள் கடந்த பிறகு தான் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் கொண்டு வர வேண்டிய சூழ்நிலை இருந்தது. தொடர்ந்து பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பி இருக்கிறேன்.


முதலமைச்சர் இதை வலியுறுத்தி இருக்கிறார்கள். அங்க இருக்க கூடிய அமைச்சர்களை தொடர்ந்து சந்தித்து இஸ்ரோவில் வேலை செய்யக்கூடிய அறிவியலாளர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடியவர்களை சந்தித்து கோரிக்கைகளை வைத்திருக்கிறேன். அங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறேன்.



 


தற்போது குலசேகரபட்டினம் இஸ்ரோ அமையக்கூடிய இடத்தில் இடத்தை தேர்வு செய்தது மற்றும் இடம் கையகப்படுத்துவது போன்ற பல்வேறு பிரச்சனைகளை நாங்கள் சந்தித்து இருக்கிறோம். அதை அத்தனை பேரும் இணைந்து நின்று சரி செய்து இருக்கிறோம் என்றார்.