தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் நெடுஞ்சாலை அருகே பங்கய மலராள் கேழ்வன் என்று தொடங்கும், பாண்டியர் காலத்தைச் சேர்ந்த , பாடல் அமைப்பில் உள்ள கல்வெட்டு அறியப்பட்டுள்ளது.




தூத்துக்குடி மடத்தூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் பி.ராஜேஷ் மடத்தூரில் பழமையானக் கமலைக் கிணறு இருப்பதாகக் கூறியதன் பேரில் தொல்லியல் ஆராய்ச்சியாளர் முனைவர் தவசிமுத்து மாறன் நேரில் அதனைப்பார்த்த பின்பு கூறியதாவது, தமிழகம் முழுவதும் உள்ள கல்வெட்டுகளில், பல்வேறு வணிகக் குழுவினர் பெயர்கள் காணப்படுகின்றன. இவற்றில் நானாதேசி என்போர் எல்லா நாடுகளுக்கும் கடல் வழி மற்றும் தரைவழியாகச்சென்று வணிகம் செய்பவர்கள். திசையாயிரம் என்போர் எல்லாத் திசைகளுக்கும் சென்று வணிகம் செய்வோர் என்று பொருள்படும். இத்தகைய வணிகக் குழுவினர் தங்களுக்கென பாதுகாப்பு வீரர்களையும் வைத்திருந்தனர். பிராமணர்களுக்கு தானமாக ஒரு ஊரினை மங்கலம் என்ற பெயரில்,உருவாக்கிக் கொடுத்து அதன் காவல் பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டுள்ளதை அறிய முடிகிறது.






முதலாம் மாறவர்மன்சுந்தரபாண்டியன் கல்வெட்டு (கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை) கி.பி.1234 இல் உள்ள இருபது வரிகளைக் கொண்டு உள்ளது. கமலைக் கிணற்றில் இதன் கீழ்ப்பகுதியில். அதன் முன்பு 7 அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ள செவ்வக வடிவிலான இதன் மேற்பகுதி குறுகலாக அமைந்துள்ளது. இந்த ஊர் நானா தேசிநல்லூர் என்றழைக்கப்பட்டதைக் குறிப்பிடும் விதத்தில், தாமரைப்பூவில் வாசம் செய்யும் லட்சுமியின் மணாளன் பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள், மென் பாதராமன் சிவந்த சூரியனாக ஒளிவிடும், ராசன் நானாதேசி நல்லூரின் அரசன் ஆண்டு 1234 இல் கங்கை நீர் போல வற்றாத கிணற்றை, அமைத்திட உலகம் போற்ற உத்தரவிட்டான் . என்றென்றும் மக்களுக்கு தண்ணீர் தருவதை இனிமையான தமிழால் கூறு என்ற பொருள்பட இக்கல்வெட்டு அமைந்துள்ளது.




கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒருவகை நெம்புகோல் அமைப்பு துலாக்கல் அல்லது ஏற்றம் என்றழைக்கப்படுகிறது . மக்களுக்குத் தேவையான மழைநீர் கிடைக்காமல் கண்மாய், குளங்கள் வறண்டு போகும் காலங்களில் கிணறுகள் தோண்டப்பட்டு பயன்படுத்தப்படுவது வழக்கம். இத்தகைய கிணறுகளை நடைமுறையில் அப்பகுதிகளின் அரசனும் அவரது சார்பில் நிர்வாகிகளும் வணிகர்களும் உருவாக்கியுள்ளனர்.. வழக்கத்தில் இருந்துள்ளது. கோயில் அருகில் வெட்டப்பட்டுள்ளவை திருமஞ்சனக் கிணறுகள் என்றும், வழிப்பாதைகளில் உள்ளவை பொது குடிநீர்க் கிணறுகள் என்றும் அறியமுடிகிறது அரசன், கமலைக் கிணற்றையும், அமைத்துக் கொடுத்துள்ளார். இங்கு கிணறு தற்போதும் பயன்பாட்டில் உள்ளது . இவ்வாறு சிறப்புமிக்கக் கல்வெட்டு தேடுவாரில்லாமல் உள்ளது. அந்த பாடலுடன் உள்ள கிணற்றுக் கல்வெட்டைப் பார்ப்பதற்க்கு பள்ளி, கல்லூரி மாணவர்களும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தற்போது அந்த இடத்தில் ஆண் பெண் தனித்தனியே சுகாதார கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாக இருக்கும் அந்தக் கிணற்றின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைப்பதுடன், சிறப்புமிக்க அந்த கல்வெட்டை சுற்றிலும் வேலி அமைத்துப் பாதுகாப்பது அந்த ஊருக்கு பெருமை தரும் என்றார்.