அமோனியா வாயு கசிவு ஏற்படவில்லை- மின்கசிவினால் ஏற்பட்ட புகையின் காரணமாகவே மூச்சு திணறல் ஏற்பட்டது- ஆலை நிர்வாகம் விளக்கம்.

Continues below advertisement

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் அமைந்துள்ளது நிலா சீ புட்ஸ் என்ற தனியார் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்  நிறுவனம் செயல்பட்டு வருகிறது இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று நள்ளிரவு அந்த ஆலையில் மின் விபத்து காரணமாக அமோனியா கேஸ் கசிவு ஏற்பட்டது. 

Continues below advertisement

இதன் காரணமாக மீன் பதனிடும் நிறுவனம் முழுவதும் அமோனியா வாயு பரவியது. இதில் அங்கு பணியில் இருந்த தமிழகத்தின் கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஐந்து பெண்கள் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 16 பெண்கள் 30 பேருக்கு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். 

இதைத்தொடர்ந்து நிலா சீ புட் நிறுவன வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடியில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனையான ஏவிஎம் மருத்துவமனை மற்றும் ராஜேஷ் திலக் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு 21க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் தனியார் மீன் பதன ஆலையில் அமோனியா கேஸ் வெளியாகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்து 30 பெண் ஊழியர்கள்  மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த ஆலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி இரவில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 54 பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது தொடர்பாக ஆலை நிர்வாகத்தினர் அளித்த பேட்டியில், அமோனியா கசிவு என்பது தவறான செய்தி எனவும் குளிர்பதனம் செய்யும் ப்ரீசர் பகுதியில் ஏற்பட்ட மின்கசிவினால் ஏற்பட்ட புகையினால் பெண்கள் மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், அதே போல் 17 பேர் மட்டுமே மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விளக்கம் அளித்தனர்.