திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என 3 போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மேட்டூர் அணை சரியான நேரத்தில் திறக்கப்படாத காரணத்தினாலும் உரிய நேரத்தில் மழை பெய்யாத காரணத்தினால் மூன்று போக சாகுபடி என்பது ஒருபோக சாகுபடி ஆக மாறியது குறிப்பாக மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட வட்டாரங்களில் ஆழ்துளை கிணறுகளை அதிக அளவில் விவசாயிகள் பயன்படுத்தி அந்த பகுதிகளில் மட்டும் மூன்று போகம் சாகுபடி பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் ஆண்டுதோறும் ஒரு லட்சம் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம் இந்த நிலையில் நீடாமங்கலம் வட்டாரத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவார்கள் இந்த நிலையில் இந்த ஆண்டு இடுபொருள்கள் விலை உயர்வு காரணமாக இந்த ஆண்டு கோடை நெல் சாகுபடி தவிர்க்க நீடாமங்கலம் வட்டார விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.




திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் தாலுகா பகுதியில் விவசாயிகள் கோடை சாகுபடியை கைவிடுவதற்கு முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நீடாமங்கலம் தாலுகா செட்டி சத்திரம் கிராமத்தில் நடைபெற்றது. தாலுக்கா முழுவதும் 25 கிராமங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். உர விலை ஏற்றம், அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு, ரசாயன உரத்தை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் மண்வளம் பாதிப்பு போன்ற காரணங்களால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நீடாமங்கலம் தாலுகா முழுவதும் சுமார் 21 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கோடை சாகுபடி இனி நடைபெறாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.




திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா முழுவதும் முப்போக சாகுபடி நடைமுறை இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் எடுத்துள்ள இந்த முடிவானது மண் வளத்தை பாதுகாக்கும் என சூழலியல் ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹலோ இடுபொருட்கள் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையில் தொடர்ந்து சாகுபடி பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது விவசாயிகள் கோடை சாகுபடியை தவிர்த்து இருக்கும் நிலையில் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நிலையை தமிழக அரசுக்கு தெரிவித்து இடுபொருள்கள் விலை உயர்வு மற்றும் அறுவடை இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.