கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை என்பது இடைவிடாது பெய்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக திருவாரூர் மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை என்பது அவ்வப்போது பெய்து வந்தது.இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தொடங்கிய கனமழை என்பது இன்று காலை வரை தொடர்ந்தது. இந்தத் தொடர் மழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. 


திருவாரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு நடந்து வரும் மறு பொதுத் தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக வலங்கைமான் பகுதியில் 47.6 மில்லி மீட்டர் குடவாசல் பகுதியில் 40.2 மில்லி மீட்டரும் நன்னிலம் பகுதியில் 40 மில்லி மீட்டரும் மன்னார்குடியில் 32.2 மில்லி மீட்டரும் திருவாரூரில் 23.2  மில்லி மீட்டரும் நீடாமங்கலத்தில் 23.6  மில்லி மீட்டரும் பாண்டவயாற்றில் 21 மில்லி மீட்டர் மலையளவு பதிவாகியுள்ளது. ஆண்டுதோறும் குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணைக்கு காவிரியில் இருந்து வர வேண்டிய நீர் வந்து சேராத காரணத்தினால் தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதிக்கு முன்னரே திறக்கப்பட்டு விவசாயிகள் தற்போது குறுவை நெல் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்




இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 49 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது அறுவடை பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பெய்து வரும் கனமழை என்பது பருத்தி அறுவடை பணிகளை மிகவும் பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து இந்த மழை பெய்தால் இறுதிகட்ட அறுவடை பணிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட கூடும் எனவும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். அறுவடை செய்து கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகளால் விற்பனை செய்வதற்கு கொண்டுவரப்படும் பருத்தி பஞ்சுகளை உடனடியாக அரசு அதிகாரிகள் கொள்முதல் செய்து அவர்களுடைய வங்கி கணக்கில் உடனடியாக பணத்தை வரவு வைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண