தஞ்சாவூர்: தஞ்சையில் காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்து தேர்வு இன்று மற்றும் நாளை என இரு நாட்கள் நடைபெறுகிறது.  இதில் ஆண்கள் 5200, பெண்கள் 1776 என மொத்தமாக 6976 பேர் தேர்வு எழுதுகின்றனர்.


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்த தேர்வு நடைபெறுகிறது. 621 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்கள் இந்த தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு போலீசில் உதவி ஆய்வாளர் பணிக்கு கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியானது. அதில் காவல் சார்நிலை பணிக்கு 511 காலி இடங்களும், சிறப்பு காவல் சார்நிலை பணிக்கு 110 பணி இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்தேர்வுக்கு, ஜூன் 1 முதல், ஜூன் 30 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பம் வரவேற்கப்பட்டது. விண்ணப்பதாரர்கள், 20 நிரம்பியவராகவும், 30 வயது மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மற்றும் நாளை தேர்வு நடைபெறுகிறது.


முதன்மைத் எழுத்து தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மதியம் பிற்பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது. தமிழ் மொழி தகுதி தேர்வு மதியம் நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று (சனிக்கிழமை) காவல்துறையில் பணியாற்றுவோரை தவிர மற்றவர்களுக்கு நடைபெறுகிறது. இதில் ஆண்கள் 5200, பெண்கள் 1776 என மொத்தமாக 6976 பேர் தேர்வு எழுதுகின்றனர்.


இந்த தேர்வானது தஞ்சாவூர் மாவட்டத்தில் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரி, சாஸ்திரா யுனிவர்சிட்டி, பிரிஸ்ட் யுனிவர்சிட்டி என நான்கு கல்லூரிகளில் தேர்வாளர்கள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக சுமார் 400 போலீசார் தேர்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முழு பரிசோதனைக்கு பிறகு தேர்வாளர்கள் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்படுவார். 


அதேபோல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காவல்துறையில் பணியாற்றுவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதில் ஆண்கள் 899, பெண்கள் 201 என மொத்தமாக 1090 பேர் தேர்வு எழுதுகின்றனர். செல்போன், கால்குலேட்டர் ,லேப்டாப் போன்ற மின்னணு சாதன பொருட்கள் கொண்டு வர அனுமதி கிடையாது. மாணவர்கள் சரியான நேரத்திற்குள் தேர்வு அறைக்குள் வரவேண்டும், செல்போன் எடுத்து வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுத் தேர்வில் பங்கேற்கலாம். தாழ்த்தப்பட்ட சாதி (SC) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடி (ST) விண்ணப்பதாரர்களுக்கு ஐந்து ஆண்டுகள் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு (ஓபிசி) மூன்று ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அவர்களின் தற்போதைய வயதிலிருந்து ராணுவப் பணியைக் கழித்துவிட்டு மூன்றாண்டுகளும் ஆகும்.


அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பது இன்றியமையாத போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தகுதித் தேவை. இது எந்த ஸ்ட்ரீமிலும் இருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி இல்லை என்றால் சப்-இன்ஸ்பெக்டர் ஆக முடியாது.