திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரதேசி கோபிராம். 54 வயதான இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார. இவர் ஓவிய ஆசிரியராக ஐந்து வருடம் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு ஆன்மீக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் கடுகில் உலக வரைபடத்தை வரைந்தது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் தற்போது இயற்கை கொசு விரட்டி ஒன்றை கண்டுபிடித்திருப்பதாகவும் அது புகையவும் செய்யாது எரியவும் செய்யாது ஆனால் கொசு உள்ளிட்ட பூச்சிகளை வீட்டிற்குள் வரவிடாமல் விரட்டும் என்றும் இது பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தலாம் என்றும் இதன் நறுமணத்தை சுவாசிக்கலாம் இதன் மூலம் நுரையீரல் பிரச்சனை சளி, இருமல், மூக்கடைப்பு, தலைவலி, தலைசுற்றல், தூக்கமின்மை, மன அழுத்தம், காதிரைச்சல் போன்ற பல தொந்தரவுகள் நீங்கும் என்றும் அவர் கூறுகிறார்.
இதனை வியாபார நோக்கம் இல்லாமல் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்த வேண்டும் என்றும் தற்போது கடைகளில் விற்கப்படும் கொசுவர்த்திகளில் ரசாயன கலவை அதிகமாக காணப்படுவதால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதாகும் இதனை பயன்படுத்துவது மூலம் உடல் பாதைகள் நீங்குவதுடன் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் சுவாசிக்கவும் செய்யலாம் என்றும் கூறுகிறார்.
மேலும் இதனை விரும்பி கேட்பவர்களுக்கு நூறு ரூபாய் மதிப்பில் தயார் செய்தும் கொடுக்கிறார். மேலும் அவர் கூறுகையில், 50 மில்லி வேப்ப எண்ணெயில் மூன்று மணி நேரம் இந்த கொசு விரட்டி வேலை செய்யும் என்றும் எட்டு ரூபாய் ஒரு நாளைக்கு செலவு செய்தால் இயற்கை முறையிலான கொசு விரட்டி பயன்படுத்தி உடல் ஆரோக்கியமும் பெற முடியும் என்று அவர் தெரிவிக்கிறார். இதனை வியாபார நோக்கம் அல்லாமல் தான் தயாரித்ததாகவும் அனைவரும் பயன்படுத்தி பயன் பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக இதில் வேப்பிலை தவிர வேறு மூலிகைகளை பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் கூறுகிறார்.