நாகையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்றவர்கள் ஆட்சியர் தலைமையில் தாய்ப்பால் வார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தை உலக தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியானது நீலா தெற்கு வீதி, பெரிய கடைத் தெரு வழியாக சென்று ரயில் நிலைத்தில் நிறைவுப்பெற்றது. இதில் நாகை மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றக் கூடிய பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தாய்ப்பாலின் அவசியத்தை விளக்கும் பதாகைகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். முன்னதாக ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் உலக தாய்ப்பால் வாரவிழாவினை முன்னிட்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்