தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு அந்தந்த கூட்டுறவு கடன் சங்கங்களின் உறுப்பினர்கள் வாக்களிப்பதன் மூலம் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவர்.அந்த வகையில் கடந்த ஐந்து வருட காலமாக பெரும்பாலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் பதவி வகித்து வருகின்றனர்.இந்த நிலையில் விரைவில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது.




இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது.அதனைத் தொடர்ந்து இது குறித்து திருவாரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா விசாரணை நடத்தினார்.இந்த விசாரணையில் நிர்வாக சீர்கேடுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் கச்சகம் கூட்டுறவு சங்க தலைவர் வெற்றிவேலை பதவி நீக்கம் செய்து இணைப்பதிவாளர் சித்ரா உத்தரவிட்டுள்ளார்.




குறிப்பாக கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றிய செயலாளர் ஒருவர் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு அதற்கான பண பலன்களை முன்கூட்டியே வெற்றிவேல் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் காரணமாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதே போன்று திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடந்த ஆட்சிக் காலங்களில் நிர்வாக சீர்கேட்டில் ஈடுபட்டிருந்ததாக கூட்டுறவு வங்கி செயலாளர்கள் கூட்டுறவு வங்கி தலைவர்கள் தற்காலிக பணி நீக்கம் நிரந்தர பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். மேலும் இதே போன்று நிர்வாக சீர்கேட்டில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் தற்சமயம் கூட்டுறவு வங்கியில் பயிர் காப்பீடு தொகை பெறுவதில் முறைகேடு விவசாய நகை கடன் வைத்ததில் முறைகேடு நடந்திருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது ஆகையால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து விவசாயிகள் தாங்கள் வைத்த நகைக்கடன்களுக்கு நகைகளை முழுமையாக திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண