நாகையை அடுத்த பாப்பாக்கோவில், ஏறும்சாலை கற்பக விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜ்குமார் (39). விடுதலை சிறுத்தைகள் கட்சி பாப்பாக்கோவில் கிளை செயலாளராக உள்ளார். இவரது மனைவி அனுசுயா (35).இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிய நிலையில் 2 மகள்கள், ஒரு  மகன் உள்ளனர். 



 

இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி  அதிகாலை ராஜ்குமார் உடல் கருகிய நிலையில் வீட்டின் முன்பு இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த  நாகை நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.  சம்பவ இடத்துக்குச் சென்று பிரேதத்தை  கைப்பற்றி  பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து,போலீசார் ராஜ்குமார் கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.



 

இதில் ராஜ்குமாரின் மனைவி  அனுசுயா இவரது தாயார் நிர்மலா (60) ஆகியோர் இணைந்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராஜ்குமாருக்கு  குடிப்பழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்தது. பல முறை சமாதானம் ஏற்பட்டும் பிரச்னை இருந்து வந்தது. இதனால் கோபமடைந்த மனைவி, மாமியார் ஆகிய இரண்டு பேரும்.

 



 

சேர்ந்து கடந்த 14ம் தேதி உணவில் அதிகளவில் தூக்க மாத்திரைகளைகலந்து கொடுத்தனர். இதை சாப்பிட்டு ராஜ்குமார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது வீட்டில் சமையலுக்காக வைத்திருந்த  மண்ணெண்ணையை  ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இன்று அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். 

 

 



 


தைப்பூசத்தை முன்னிட்டு சிக்கல் சிங்காரவேலன் சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது பெரும் தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

 



 

 

 

நாகை மாவட்டம் சிக்கலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சிங்கார வேலவர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு இணையான ஸ்தலம் என பக்தர்களால் போற்றப்படும் ஆலயமாகும். இந்த ஆலயத்தில் இருந்துதான் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ய வேல் நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி சென்றதாக புராணங்கள் கூறுகிறது. புகழ்பெற்ற இவ்வாலயத்தில் பழனி முருகன் ஆண்டி கோலத்தில் இருந்தபோது சிவபெருமான் ஞானவேல் வழங்கிய தினமான தைப்பூசத் திருநாளை முன்னிட்டு .

 



 

சிக்கல் சிங்காரவேல வருக்கு இன்று விடியற்காலை மூலமந்திர சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் முருகப்பெருமானுக்கு பால் பன்னீர் விபூதி சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக்கொண்டு  அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து யாகசாலையில் இருந்து கலச நீர் எடுத்து வரப்பட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து தீப ஆராதனைகள் நடைபெற்றன கொரானா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு கோவில் குளத்தில் நடைபெறும்  தெப்ப உற்சவம் ரத்து செய்யப்பட்டது.