தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.   இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை கடந்த நான்கு நாட்களாக பெய்து வருகிறது.  நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் சராசரியாக 51.64 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 32 மில்லி மீட்டர், மணல்மேடு 29 மில்லி மீட்டர், சீர்காழி 60 மில்லி மீட்டர்,  கொள்ளிடம் 98 மில்லி மீட்டர், தரங்கம்பாடி 38 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிக பட்சமாக கொள்ளிடம் ஆனைக்காரன் சத்திரத்தில் 98 மில்லி மீட்டர்  மழையும் குறைந்தபட்சமாக மணல்மேட்டில் 29 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்துள்ளார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு : ஆத்தூரில் பாமகவினர் சாலை மறியல்.. பஸ் கண்ணாடிகள் உடைப்பு




Puneeth Rajkumar | தானம் செய்யப்பட்ட புனீத் ராஜ்குமாரின் இரு கண்களால், நான்கு பேருக்கு பார்வை கிடைத்தது எப்படி?


இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் அவ்வப்போது விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை மூன்று முறை விடுமுறை அளிக்கப்பட்டடுள்ள நிலையில் காலை 8 மணிக்கு மேல்தான் இந்த அறிவிப்பு வெளியாகிறது. இதனால் கிராமப்புறங்களில் இருந்து பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் காலையை புறப்பட்டு மழையில் நனைந்து கடும் சிரமத்துடன் பள்ளிகளுக்கு வந்து விடுகின்றனர். அதன் பின்னர் வெளியாகும் விடுமுறை அறிவிப்பால் மீண்டும் மழையில் நனைந்து பள்ளிகளுக்கு சென்று வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது.   


LIC Aadhar Stamp Policy: எல்ஐசியின் ஆதார் ஸ்டாம்ப் பிரீமியம் திட்டம்.. குறைந்த முதலீடு.. செம்ம பலன்கள்..




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


உள்ளூர் மாணவர்கள் பலர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது தெரிந்து பாதி வழியில் வீடு திரும்புகின்றனர். அதிகாலை முதலே மழை பெய்து வரும் நிலையில்  முன்னதாகவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தால் பேருந்தில் காலையிலேயே கொட்டும் மழையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் சிரமத்தைக்  தவிர்க்க முடியும் என்று  சமூக ஆர்வலர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Schools Leave : தமிழ்நாட்டில் கனமழையால் எந்தெந்த மாவட்டங்களில், இன்று விடுமுறை தெரியுமா..?